பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
103
 


பதற்குமுன் தம் வீட்டில் ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு நெருங்கிய நண்பர்களைக் கலந்தாலோசித்தார் கமலக்கண்ணன். எல்லாரும் விருந்து சாப்பிட்ட பின்னர் மொட்டை மாடியில் ஆலோசனை ஆரம்பமாயிற்று.

“நம்ம தொகுதியில் பெண் வாக்காளர்கள்தான் அதிகம். ஆகவே பெண்களுக்கு அதிகம் பரிச்சயமுள்ள இன்னம் ஒன்று வேண்டும்...” என்றார் கமலக்கண்ணன்.

“மலர்—தான் பெண்களுக்கு அதிகமாக அறிமுகமானது. எனவே ‘பூ’ சின்னம் வைக்கலாம்”—என்றார் புலவர் வெண்ணெய்க் கண்ணனார்.

“முடியவே முடியாது! அந்தச் சின்னத்தை இதே தொகுதியில் நிற்கும் ‘சிவராசன்’ என்ற மற்றொரு சுயேச்சை அபேட்சகர் வைத்துக்கொண்டு விட்டார்” என்று உடனே அந்த யோசனை மறுக்கப்பட்டது.

“குடம்—அல்லது பானை...”

“அதுவும் சாத்தியமில்லை. இதே தொகுதியில் பார்லிமெண்டிற்கு நிற்கிற சுயேச்சை சுப்பையாவின் சின்னம் அது.”

குடமும் கைவிடப்பட்டது.

“வளையல்–ஹேர் பின்...”

“கண்ணுக்குப் போல்டாகத் தெரியாத சின்னங்களால் பயனில்லை. பிரச்சாரமும் பயனளிக்காது.”

—கண்ணுக்குப் போல்டாகத் தெரியாதவை என்ற காரணத்தால் வளையலும் ஹேர் பின்னும் கைவிடப்பட்டன.

“அரிவாள்மணை—அடுப்பு—விறகு......காபி டவரா டம்ளர்...”

“அமங்கலம்! அமங்கலம்! இவை யாவுமே மங்கலக் குறிகளல்ல"– என்று மறுத்தார் புலவர்.

அவைகளும் கைவிடப்பட்டன.

சில நிமிடங்கள் அமைதி நிலவிற்று.

“எல்லாரும் ஒப்புக்கொள்வதாயிருந்தால் நான் ஒன்று சொல்கிறேன்.... யாரும் மறுக்கக்கூடாது..."என்று பிரகாஷ் பப்ளிவிடீஸ் பிரகாசம் தொடங்கினார். கமலக்கண்ணன்