பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
106
நெஞ்சக்கனல்
 


தேர்தல் ஊர்வலங்கள் நடத்தி நடைமுறையில் கமலக் கண்ணனின் சின்னத்திற்கே ஒட்டைப் போட வேண்டுமென்று கோஷங்கள் இடும் போதுதான் ஒரு தொல்லை புரிந்தது.

“உங்கள் ஒட்டை”—என்று ஒருவர் கோஷத்தைத் தொடங்கினால்,

“கிணற்றில் போடுங்கள்’’—என்று மற்றும் பலர் அதைத் தொடர்ந்து சொல்லி முடிப்பதைக் கேட்கும் போது அந்தச் சொற்றொடர்கள் கமலக்கண்ணனுக்காகப் பிரச்சாரம் செய்வதாகத் தோன்றியதைவிடத் துஷ்பிரச்சாரம் செய்வதுபோல் ஒலிக்கத் தொடங்கின. உடனே பலத்த சந்தேகத்தோடு கோஷங்கள் நிறுத்தப்பட்டன. அன்றிரவே இந்தப்பிரச்சினை வாசகங்களின் தேர்தல் மொழி அதிகாரியும் பிரச்சாரப் பொறுப்பாளருமாகிய புலவர் வெண்ணெய்க்கண்ணனாரிடம் கொண்டு போகப்பட்டது.

“உங்கள் ஒட்டைக் கிணற்றில் போடுங்கள்...என்பது சரியா அல்லது வேறு விதமாகத்தான் சொல்ல வேண்டுமா?”

“அடபாவிகளா! கெடுத்தீர்களே குடியை அறியாதவன், தெரியாதவன் கிணற்றிலேயே கொண்டுபோய் ஒட்டைப் போட்டுவிடப் போகிறான்! இனிமேல், ‘உங்கள் ஒட்டைக் கிணற்றுச் சின்னத்திலேயே போடுங்கள்’–என்று பிரச்சாரம் செய்ய வேண்டுமே ஒழியவேறுவிதமாகப் பிரச்சாரம் செய்யக்கூடாது” –என்று முடிவு கூறப்பட்டது. தேர்தல் போர்க்களத்தில் மாற்று அபேட்சகர்களாகிய எதிரிகளின் முகாம்களிலிருந்து ஒவ்வொருநாளும் ஒவ்வொரு விதமான செய்திகள் கமலக்கண்ணனுக்குக் கிடைத்தன. அவற்றிற்கெல்லாம் தகுந்தபடி கமலக்கண்ணனும் பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டியிருந்தது.

“பூச்சின்னக்காரர் தன்னுடைய வாக்காளர்களைச் சந்திக்கப் போகும்போது பூவும், தேங்காய்ச் சின்னக்காரர் வாக்காளர்களைச் சந்திக்கப் போகும்போது தேங்காயும் கொடுக்கிறார்கள். மக்களும் இப்படிப் புதுமையான முறை-