பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

நெஞ்சக்கனல்

யிரம் குடுப்பியா?”—என்றான் ஒருவன். இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரே சேரிக்கு ஆறு பேர் தங்களையே தனிப் பெரும் தலைவர்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்டனர். சேரி, குடிசைப் பகுதிகளுக்குள் கமலக்கண்ணனே நேரில் நடந்துபோய் குடிசை குடிசையாக ஒட்டுக் கேட்க வேண்டுமென்று பிரகாசம் யோசனை கூறினார்.

“ஒரே சேறும் சகதியுமா ரொம்ப டர்ட்டி ப்ளேஸா இருக்குமே? நாம்பளே போவானேன்னு பார்க்கிறேன். ரூபாயை வீசி எறிஞ்சாலே நடக்காது...?”— என்றார் கமலக்கண்ணன்.

“ரூபாயும் வேணும்தான்! ஆனா நேரேயும் போனால் தான் நல்லது. நேரே போகலேங்கறது. ஒரு குறையா ஆயிறப்பிடாது பாருங்க?”

“சரி! போனாப் போகுது. காரிலே முடியாது நடந்தேதான் போய் ஆகணும்.”

“காரை மெயின் ரேர்டிலே விட்டுட்டு இறங்கி நடந்துட வேண்டியதுதான். நாங்கள்ளாம் கூட வருவோம். ஒரு பந்தாவா – அஞ்சாறு பேர் சேர்ந்து போனம்னாலேகளை கட்டிப்பிடும்.”

“அதான் செய்துடலாம்னேனே.”

“நம்ம எனாமல் கிணறு பாட்ஜ் கொஞ்சம் கையோட எடுத்துக்கனும், குடிசைக்குக் குடிசை அதையும் ஒரு ஞாபகமாகக் கொடுத்துட்டு வந்துடலாம்.”

“ஒகே! வர ஞாயிற்றுக்கிழமை காலைலே புறப்பட்டுடலாம் எல்லா ஏற்பாடும் பண்ணிப்பிடு...”

பிரகாசம் கமலக்கண்ணனின் ஸ்லம் விஜயத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்தார். ஞாயிறு காலையும் விடிந்தது. தேர்தல் பரிவாரங்கள் புடைசூழ மின்னல் வழிவது போல ஸில்க் ஜிப்பாவும், பட்டு வேஷ்டியும், அழுக்குப் படாத புதுப் பாதரட்சைகளும், கை நிறைய டாலடிக்கும் மோதிரங்களுமாகக் கமலக்கண்ணன் சேரியில் புகுந்தார்.

என்ன ஆச்சரியம்! முதல் குடிசையிலே அவருக்கு ரோஜாப்பூ மாலை போட்டு ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள் ‘இந்த சேரி மக்களுக்கு நாம் எதுவுமே செய்யவில்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/112&oldid=1048386" இலிருந்து மீள்விக்கப்பட்டது