பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

நெஞ்சக்கனல்


“என்னய்யா? என்னமோ நான் பழைய ஜஸ்டிஸ் கட்சி ஆளுன்னு ‘டிக்கட்’ கொடுக்க பயந்தீங்க; அப்படியிருந்தும் ஜெயிச்சுட்டேன்.”

“எனக்குத் தெரியாதா சார் உங்க பெருமை? ஏதோ நம்ம கட்சியிலே விடலைப் பசங்க... ஆ..ஹீன்னாங்க... இப்ப அவங்களுக்கே மூஞ்சிலே கரியைப் பூசினாப்ல நீங்க ஜெயிச்சிட்டீங்க...ஆனாலும் நம் கட்சிக்கு இத்தனை செல்வாக்கு இருந்தும்கூட உங்க தொகுதியிலே உங்களை எதிர்த்து யாரையுமே நாங்க நிறுத்தலியே...”

“நிறுத்தியிருந்தீங்கன்னாக் கூட நம்ப முதலாளியை அடிச்சிருக்க முடியாது. இருபதாயிரத்துக்கு மேலேயில்ல ஒட்டு வித்தியாசப்படுது...” என்று ‘முதலாளி’யைக் காக்காய் பிடித்தார் ஒருவர்.

அன்றிரவு கமலக்கண்ணன் வீட்டில் ஒரு நூறுபேருக்கு மேல் வடை—பாயாசத்தோடு விருந்து சாப்பிட்டார்கள். கமலக்கண்ணனுடைய வெற்றி அமோகமாகக் கொண்டாடப்பட்டது.

“நாளன்றைக்குச் சாயங்காலம் ‘பார்டி ஆபீஸிலே’—ஒரு பாராட்டுக் கூட்டம் வச்சிருக்கோமுங்க. நீங்க அவசியம் வந்துடணும்”—என்று கட்சித் தலைவர் தொடங்கியபோது.

“அங்கேயா? உங்க கட்சியைச் சேர்ந்த தடிப்பசங்க யாராச்சும், ‘வாபஸ் வாங்கு’—அது இதுன்னு கத்தினா நான் வரமாட்டேன். ஏற்கெனவே அன்னிக்கி ஊழியர் கூட்டத்திலே அவங்க நடந்துக்கிட்டது எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கல்லே...நான் பெரிய மனுசன் வீட்டுப் பிள்ளை...பொடிப்பசங்க கண்டபடி கேள்வி கேட்டா எனக்குப் பிடிக்காது...”

“அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாதுங்க...இது நீங்க ஜெயிச்சதுக்காகப் பாராட்டுக் கூட்டம்தானே?...”

“ஒண்ணும் தாறுமாறாஆகாதுன்னா வார்த்தைப்பத்தி எனக்கொண்ணுமில்லை. ‘கட்சியிலே நீங்க எவ்வளவு காலமாக உறுப்பினர்? தீவிர உறுப்பினரா? சாதாரண உறுப்-