120
நெஞ்சக்கனல்
உபகாரம் பண்ணலாம்...” என்று அந்தரங்கமாகக் கமலக்கண்ணனுக்கு யோசனை கூறினார் அனுதாபியும், பிரமுகருமான ஒரு நண்பர்.
“கல்வி எதுக்கு? இண்டஸ்ட்ரீஸ் அண்ட் லேபர் தான் நல்லதுன்னு பார்க்கிறேன்” என்று கமலக்கண்ணனும் மெல்ல அதற்கு ஒத்துப் பேசினார்.
கமலக்கண்ணன் பங்களாவில் பின்பக்கத்து அறையில் நடமாட்டமின்றிக் கிடந்த தாயைப் போய்ப் பார்த்து வணங்கிவிட்டு வந்தார். உடனே பக்கத்திலிருந்த நிருபர் கலைச்செழியன் அதையே ஒரு செய்தியாக எழுதி மறுநாள் தினக்குரலில் பிரசுரிக்கு மாறு ஃபோனில் கூறினான்.
“வெற்றிபெற்ற செய்தியறிந்ததும், நேரே அன்னையைக் கண்டு வணங்கி ஆசி பெற்றார் கமலக்கண்ணன்”–என்று தினக்குரலில் முதல் பக்கத்தில் கட்டம் கட்டிச் செய்தி போடுவதற்கு ஏற்பாடு செய்தாயிற்று. சாதாரண மனிதன் எளிமையாயிருந்தால், சாதாரணமனிதன் தாயன் போடிருந்தால், சாதாரண மனிதன் தெய்வபக்தியோடிருந் தால், அதற்கெல்லாம் விளம்பரமோ, புகழோ, வியப்போ கிடைக்காது. செல்வாக்குள்ளவனின் குண நியாயங்கள் தான் தேவையை மீறிக் கொண்டாடப்படும். தேவையை மீறி விளம்பரப்படுத்தப்படும். கமலக்கண்ணனின் சாதாரண செயல்கள் கூடக் குணங்களாகவும், இலட்சியச்செயல்களாகவும் விளம்பரப்படுத்தப்பட்டன.
கமலக்கண்ணனின் பங்களா கலியாண வீடு போலாகி விட்டது. வருகிறவர்களும் போகிறவர்களும் அதிகமானார்கள். காலையிலும் மாலையிலுமாக தினம் ஐம்பது பேருக்குக் குறையாமல் சாப்பிடத் தொடங்கினார்கள்.
தேர்தலில் வெற்றிபெற்றதற்காக நன்றி அறிவிப்புக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்குள் பிரகாசம் ஆஸ்பத்திரியிலிருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகிவந்திருந்த தனால் கூட்டத்தை அவனே நடத்தினான். பேசிய பேச்சாளர்கள் யாவருமே கமலக்கண்ணன் அமைச்சராக வந்து நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டியதன் அவசியத்தை