பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

நெஞ்சக்கனல்


“மாலை போட்டாலும் பரவாயில்லை. நாலு பேர் கூடியிருக்கிறப்ப அவமானப்படுத்தாமே இருந்தாக்கூடப் போதும்.”

“அதெல்லாம் ஒண்னும் நடக்காது! நீங்க கவலைப்படாம வாங்க...” என்றார் கட்சித் தலைவர்.

இதற்குள் பத்திரிகைகளில் எல்லாம் கமலக்கண்ணன். மந்திரியாக வர இடமிருப்பதாக உறுதியான ஹேஷ்யங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. அறநிலையப் பாதுகாப்பு மந்திரியாக வருவார் – என்பது சில பத்திரிகைகளின் ஹேஷ்யம் கல்வி மந்திரியாக வருவார் என்பது வேறு சில பத்திரிகைகளின் ஹேஷ்யம் தொழில்மந்திரியாக வருவார் என்பது வேறு சிலரின் ஹேஷ்யமாக இருந்தது. அவற்றை எல்லாம் பார்க்கப் பார்க்க, ‘இந்த ஹேஷ்யங்கள் எல்லாம் பொய்யாகும்படி மந்திரி பதவி என்றுமே கிடைக்காமல் ஆகிவிடக்கூடாதே’–என்ற பயமும் தற்காப்பும் வேறு அவருள் தலை எடுத்தன எனவே கட்சி ஆட்களைக் கவரவும் வசீகரிக்கவும் அவரே முன்வந்து முயற்சிகள் செய்யவேண்டியிருந்தது. கொஞ்ச நஞ்சமிருந்த வேறு உடைகளையும் தூக்கி எறிந்துவிட்டு முழுக்க முழுக்கக் கதரில் இறங்கினார் கட்சியின் செல்வாக்குள்ள மனிதர்களையும், தலைவர்களையும் அடிக்கடி பார்த்து அவர்களுடைய ‘குட்புக்ஸ்’ஸில் இருக்க முயற்சி செய்தார். கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் மெல்ல ஒரு காருக்கு அடிப்போட்டார். கமலக்கண்ணனிடம் நேரடியாகப் பணம் கேட்க அவருக்குத் தயக்கமாயிருந்தது. “கட்சி வேலையா அலைச்சல் அதிகம். நீங்க எனக்குச் செய்யறதா கவே நினைக்கப்படாது. கட்சிக்கே இதைச் செய்யறதாகத் தான் வச்சுக்கணும். உங்கக்கிட்ட உபயோகத்திலே இருக்கிற வண்டியா இருந்தாக்கூடப் பரவாயில்லே” என்றார் பிரமுகர்.

“பார்க்கலாம்! கொஞ்சம் டயம் குடுங்க, யோசிக்கறேன்”–என்று நழுவப் பார்த்தார் கமலக்கண்ணன். பிரமுகரும் சுற்றிச் சுற்றி அதே பேச்சுக்கு வரவே நாசூக்காக மந்திரி பதவியைப் பதிலுக்கு வற்புறுத்த ஆரம்பித்தார் கமலக்கண்ணன். “அது ஒண்ணும் சிரமமில்லே! நிறைய