பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

நெஞ்சக்கனல்

ருடைய மாலைகளும், எல்லாருடைய புகழும் அவர் செவிக்கு இன்பம் தந்ததை விடக்காந்திராமன் என்ன பேசப் போகிறார் எப்படிப்பட்ட மாலையைச் சூட்டப்போகிறார் என்பதையே அவர் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார். நிகழ்ச்சி நிரலில் காந்திராமனின் பெயர் கடைசியிலிருந்தது. அவர் ஒரு தீவிரமான காந்தியவாதி என்பதால் முன்பு பலமுறை கமலக்கண்ணனைப் பிடிக்காததுபோல் காண்பித்துக் கொண்ட அவர்–இன்று எப்படிக் கமலக்கண்ணனைப் பாராட்டிப் பேசப்போகிறார் என்பது எல்லாருக்கும் திகைப்பாகவும்– வியப்பாகவுமே இருந்தது. ஆனால் மின்வெட்டும் நேரத்தில் யாருமே எதிர்பாராத நிகழ்ச்சி நிகழ்ந்துவிட்டது.

“கெட்டவை நிகழ்வதற்குமுன் வானில் வால் நட்சத்திரங்கள் தோன்றுமென்பார்கள், காந்தியத்திலும், தேசியத்திலும் நம்பிக்கை இல்லாத ‘கள்ள மார்க்கெட்’ பேர்வழிகள் நம் கட்சியின் ஆதரவில் வெற்றி பெற்றிருப்பது நமது லட்சியங்களுக்கு ஏற்றதல்ல என்று நான் கருதுகிறேன். நமது கட்சி அழிவதற்குரிய உற்பாதங்களாக இந்த வெற்றிகளைக் கருதி வெறுக்கிறேன் நான்’ என்று மேடையேறிச் சீறுவதுபோன்ற குரலில் வேக வேகமாக முழங்கிவிட்டுக் கையோடு கொண்டுவந்திருந்த மாலை பொட்டலத்தைப் பிரித்துக் கமலக்கண்ணனை அவமானப் படுத்துவதுபோல் முற்றிலும் எருக்கம் பூவாலேயே கட்டப்பட்டிருந்த அந்த மாலையைத் துணிந்து அருகில் நெருங்கி அவருக்கு அணிவித்துவிட்டு–விறு விறுவென்று இறங்கி நடந்துவிட்டார் காந்திராமன். ஒருவருக்கும் அவரை எதிர்க்கத் தோன்றவில்லை. அவ்வளவேன்? கமலக்கண்ணனே எருக்கம்பால் நாற்றமடிக்கும் அந்த மாலையைக் கழற்றத் தோன்றாமல் ஐந்து நிமிஷம் ‘திக்பிரமை’ பிடித்து இருந்தார். காந்திராமன் மின்னலைப்போல் மேடையேறி ஒவ்வொரு வார்த்தையாக முழங்கிய முழக்கம் இன்னும் சபையில் எதிரொலித்துக் கொண்டிருப்பதுபோல ஒரு பிரமை நிலவியது. யாருக்கும் எதுவும் செய்யத் தோன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/126&oldid=1048874" இலிருந்து மீள்விக்கப்பட்டது