பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
125
 


வில்லை. கூட்டத்தை முடிக்கும்போது சம்பிரதாயமான முறையில், “இங்கு நடந்த அசம்பாவிதங்களுக்காக மனப் பூர்வமாக வருந்துவதோடு கமலக்கண்ணன் அவர்களிட மும், உங்களிடமும் தலைவன் என்ற முறையில் கட்சியின் சார்பில் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்” என்றார் கட்சித் தலைவர் .

“நீங்க இதைப் பெரிசு படுத்தாதிங்க...பொறாமைக்காரங்க எங்கேயும் இருப்பாங்க... எதுவும் செய்வாங்க...” என்று ஒருபிரமுகர் கமலக்கண்ணனுக்கு ஆறுதல் கூறினார்.

“பேப்பர்ல பெரிசா பாராட்டுக் கூட்டத்தில் கலாட்டான்னு வராமப் பார்த்துக்கணும்” என்று மட்டும் கமலக்கண்ணன் பதில் கூறினார்.

“அப்பிடி ‘நியூஸ்’ வராது. அதை நாங்க பார்த்துக்கறோம். நீங்க கவலைப்படாதீங்க” என்று கட்சித்தலைவர் உறுதி கூறினார். மனம் என்னவோ அவமானத்தை உணர்ந்து கொதிக்கத்தான் செய்தது. ஆனாலும் நிலைமை கெடாமல் ‘டிப்ளமேட்’ ஆக இருந்தார் கமலக்கண்ணன். அடுத்த வாரம் அசெம்பிளியின் மெஜாரிடி உறுப்பினர் களடங்கிய தேசியக் கட்சித் தலைவரின் மந்திரிகள் பட்டியல் வெளியானபோது பட்டியலில் நாலாவதாகக் கமலக்கண்ணனின் பெயரும் இருந்தது. இரண்டு நாட்களில் கட்சியின் சட்டசபை முதல்வர் பட்டியலை ஒப்படைப்பதற்காகக் கவர்னரைச் சந்திக்கச் சென்றபோது உடன் சென்றவர்களில் கமலக்கண்ணனும் ஒருவராக இருந்தார். இந்த மிதமிஞ்சிய மகிழ்ச்சிகளில் ‘காந்திராமன்’ செய்த அவமானத்தைத் தற்காலிகமாகக் கமலக்கண்ணனால் மறக்க முடிந்தது.

11

மலக்கண்ணன் அமைச்சராகிவிட்டார். நிதி, அறநிலையம்ஆகியதுறைகள் அவர் பொறுப்பில்விடப்பட்டன. காபினட் வரிசையில் அவர் இரண்டாவதாக வந்துவிட்டார்