126
நெஞ்சக்கனல்
பட்டியல் வெளியான அன்று வெறும் பெயர் வரிசையில் தான் அவர் நாலாவதாக இருந்தார். பின்பு அவருக்கு நிதியினால் இரண்டாவது இடம் கிடைத்தது கமலக்கண்ணனே ஆசைப்பட்ட ‘இண்டஸ்டரீஸ் அண்ட் லேபர்’ அவருக்குக் கிடைக்கவில்லையானாலும் அதைவிட முக்கியமான ‘நிதி’ கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைந்திருந்தார் அவர் . ‘நிதியும் தெய்வங்களும் உங்கள் பொறுப்பில் விடப்பட்டிருக்கிறார்கள்’ என்று ஒரு நண்பர் சிரித்துக்கொண்டே வேடிக்கையாகப் பாராட்டினார் கமலக்கண்ண்னின் வழக்கமான முறைகளை இந்த மந்திரி பதவி ஒரளவு மாற்றியது. அவருடைய தொழில் நிறுவனங்களைத் தவிர மந்திரி பதவி வேலைகளை வேறு அவர் கவனிக்க வேண்டியிருத்தது. காலையில் மிகமிகத் தாமதமாகவும் சோம்பேறித்தனமாகவும் எட்டரை மணி, ஒன்பதரை மணிக்குப் படுக்கையிலிருந்து எழுந்திருக்கிறவர் கண்டிப்பாக இப்போது முன் கூட்டியே எழுந்திருக்க வேண்டியிருந்தது. காலை ஏழு மணியிலிருந்தே பலவிதமானவர்கள் பார்க்க வரத்தொடங்கினார்கள். அவருடைய பழக்க வழக்கங்கள் அவரை ‘வைகறைத் துயிலெழ’ விடுவதாயில்லை அவருடைய பங்களா முகப்பில் புதிதாக போலீஸ் ‘செண்ட்ரி’ கூடாரம் ஒன்று முளைத்தது. வராண்டாவில் விடிந்ததும் பத்துப் பேராவது காத்திருக்கும் கூட்டம் தினசரி இருந்தது. கம்பெனி வேலைகளை வேறு பொறுப்பான ஆட்கள் கைக்கு மாற்றினார். தாம் டைரக்டராகவும். பார்ட்னராகவும் இருந்த தொழில் நிறுவனங்களை மனைவி பேருக்கும், தாயின் பேருக்கும், வேறு நம்பிக்கையான உறவினர்கள் பேருக்குமாக மாற்றினார். பாராட்டுக் கூட்டங்கள் விருந்துகள் ஒய்வதற்கே இரண்டு மாதங்கள் ஆகும் போல் தோன்றியது.
மந்திரி பதவியை ஏற்ற தினத்தன்று இரவில் அவருக்கு மிகவும் வேண்டிய தொழிலதிபர்கள் யாவரும் சேர்ந்து ஒரு விருந்து கொடுத்தனர். அந்த விருந்துக்கு அவருடைய நெருங்கிய நண்பர்களும், தொழிலதிபர்களும் ஆகிய குமர-