பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

127

கிரி டெக்ஸ்டைல்ஸ் குப்புசாமி நாயுடு, அம்பாள் ஆட்டோ மொபைல்ஸ் கன்னையா செட்டியார், கொச்சின் சாமில்ஸ் குமாரசாமி ஐயர், குபேராபேங் சேர்மன் கோபால் செட்டியார் எல்லாரும் வந்திருந்தார்கள். வழக்கமாகவே நெருங்கிய நண்பர்களாகிய அவர்கள் இப்போதுதான் புதிதாக மதிக்கத் தொடங்கியவர்களைப் போலக் கமலக்கண்ணனை மதிக்கத்தொடங்கினர். கமலக்கண்ணனுக்குத் திடீரென்று அது செயற்கையாகத் தோன்றியது. இப்படி மரியாதையையும், விருந்தையும், பாராட்டையும் எதிர்கொள்கிற வேளைகளில் எல்லாம் – எருக்கம்பூ மாலையுடன் காந்திராமன் தன் முன் நின்ற அந்த முதல் அவமானம் ஒரு விநாடி அவர் மனத்தில் நினைவு வரத்தவருவ தில்லை.

அவரிடமே நாலைந்து கார்கள் இருந்தாலும், தேசியக் கொடிபறக்கும் கப்பல்போல் பெரிய வெளிநாட்டுக்கார் – போர்டிகோவில் அரசாங்க சின்னமாக வந்து நின்றது அதில் தான் அவர் தினசரி செக்ரடேரியட்டுக்குப் போய் வந்தார். நிறையப் பிரசங்கங்களுக்கும், தலைமை வகிக்கவும் போய் வரவேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததனால் தமிழ்ப்பண்டிதர் வெண்ணெய்க்கண்ணனாரின் உதவி அதிகமாகத் தேவைப்பட்டது. எந்தக்கூட்டத்திற்காக யார் வந்து கேட்டாலும் மறுக்காமல் ஒப்புக்கொண்டு ஒரு பொதுப் பிரமுகராக உயர ஆசையிருந்தது அவருக்கு. தம்முடைய பெர்ஸனல் செகரெட்டரியை ஒரு நாள் தனியே அறைக்குள் அழைத்துச் சென்று கூச்சமில்லாமல் கீழ்வரும் அறிவுரைகளைக் கூறினார் கமலக்கண்ணன்.

‘எந்தக் கூட்டத்துக்குக் கூப்பிட் வந்தாங்கன்னாலும் ‘வால்போஸ்டர்’ போடு வாங்களான்னு தெரிஞ்சுக்குங்க. ‘வால்போஸ்டர் போட வசதி இல்லேன்’னாங்கன்னா ‘வால் போஸ்டர் கண்டிப்பாப் போடனும், அப்பத்தான் மத்திரி வர்ரத்துக்கு, ஒரு கெளரவமா இருக்கும்’னு வற்புறுத்திச் சொல்லிப்பிடனும். எந்தக்கூட்டம்னாலும் ஐயா தலைமை தாங்கத்தான் ஒத்துக்குவார்னு சொல்லிப்பாருங்க. இல்லாட்டி முக்கியமான ஏதாவது ஒன்னைச் செய்யற மாதிரி