பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

நெஞ்சக்கனல்

விப்பை ஏறிட்டுப்பார்த்தார் அவர். மீண்டும்இரண்டாவது முறையாகக் கசப்போடு சென்றது அவருடைய பார்வை.

நடிகை மாயாதேவிக்கும்
பிரபல தொழிலதிபருக்கும் தொடர்பு
சுவையான விவரங்கள் அடுத்த
‘உண்மை ஊழியனில்’ பாருங்கள்.

என்று அந்தப் பக்கத்தில் கட்டம் கட்டிய இடத்தில் அச்சிடப்பட்டிருந்தது.

“காலிப்பயல்கள்! என்னைப் பயமுறுத்திப் பணம் பறிக்கலாம் என்று எண்ணிக் கொண்டார்களா என்ன? இப்போதே மான நஷ்ட வழக்குப்போட வக்கீலைக் கூப் பிடுகிறேன் பார்!” என்று சீறினார் கமலக்கண்ணன்.

“சார்! பதறாதீங்க...அதெல்லாம் ஒண்ணும் பலிக்காது. இப்பவே அப்படி எல்லாம் மானநஷ்ட வழக்குப் போடமுடியாது.”

“ஏன்? அதைப்பத்தி உனக்கென்ன தெரியும்?”

“பிரபல தொழிலதிபருக்கும்’னு மட்டும்தானே போட்டிருக்கு? அதை வச்சு நீங்களே எங்கப்பன் குதிருக் குள்ளே இல்லேன்னு எப்படி வழக்குப் போட முடியும்ன்னேன்? இதெல்லாம் காதோடகாது வச்சாப்பிவ கமுக்கமா முடிக்கனும் சார்... வழக்கு–கிழக்குன்னு போய் மாட்டிக்கப்படாது.”

”பிரபல தொழிலதிபருக்கும்’னு போட்டிருக்கிறது என்னைக் குறிக்காதில்லே...? பின்னே ஏன் என் கிட்டக் கொண்டாந்து காமிக்கிறே?”

“அப்படியில்லே சார், உங்களைத்தான் எழுதப் போறானின்னு எனக்குத் தெரியுது சார்! ஆனாலும் சட்டப்படி இந்த அறிவிப்பை வச்சு ஒண்ணும் அவன் மேலே நீங்க கேஸ் போட முடியாதுன்னேன்...”

“அதெப்பிடி அவன் ‘எவன்’னு ஒரு வார்த்தை சொல்லு..? இப்பவே கமிஷனருக்கு ஃபோன் பண்ணி உள்ளே தள்ளிப்புடறேன்... நீயா என்னைப் பத்தித்தான்