132
நெஞ்சக்கனல்
“யாரிட்டக் கொடுக்கணும்? எவ்வளவு கொடுக்கனும்...”
“ஏதோ...கொடுங்க...உங்களுக்குத் தெரியாதுங்களா?”
“அந்த ‘உண்மைஊழியனை’ இங்கே தான் கூட்டிக்கிட்டு வாயேன். நைசா உக்கார வச்சுப் பேசிக்கிட்டே போலீசுக்கு ஃபோன் பண்ணலாம்...”–என்றார் கமலக்கண்ணன்.
“சே! சே! அதுகூடாது! அவன் எமகாதகன். கூப்பிட்டால் வரமாட்டான். நமக்குத்தான் வீண்வம்பு. எதையாவது தாறுமாறா எழுதி நாலு பேர் அதை வாங்கியும் பார்த்தாச்சுன்னா அப்புறம் தகவல் காட்டுத் தீப்போலப் பரவி வச்சுடுங்க...”
“இந்தக் காலிப்பயலோட பேப்பர் ஆபீஸ் எங்கே தான் இருக்கு...?”
“இதுக்கெல்லாம் ஆபீஸ் ஏதுங்க? எங்கேயாவது கோடம்பாக்கத்திலே ஒரு அட்ரஸ் போட்டு இருக்கும்; அங்கே போனா ஆள் இருக்க மாட்டாங்க...உங்களைப் போலொத்தவங்க அங்கே தேடிட்டுப் போறதும் நல்லா இருக்காது...”
“பின்னே என்னதான் செய்யிறது?”
“நான் பார்த்து முடிக்கிறேங்க...”
“எதை?”
“ஆக வேண்டியதை...”
“என்ன ஆகவேண்டியதை...?”
“ஒண்னும் வராமச் செய்திடறேன். எதைக் கொடுக்கனுமோ–எங்கிட்டக் கொடுத்தனுப்புங்க... என்னைப் போல இருக்கிறவன் அவமானப்பட்டால் பாதகமில்லை. உங்கபேரு கெடப்பிடாது. அதுதான் எனக்குக் கவலை...”
–கமலக்கண்ணனுக்குக் கோபம் கோபமாக வந்தது.
‘துண்டு விழுகிற பட்ஜெட்டை எந்த மறைமுக வரி அல்லது நேர்முக வரியினால் சரிக்கட்டுவது! மக்களிடமும் பொருளாதார எமன்களிடமும் நல்ல பெயரெடுக்கிற மாதிரி எப்படிப் புதிய பட்ஜெட்டைத் தயாரிப்பது?’–என்றெல்லாம் கடந்த சில நாட்களாகக் கவலையிலாழ்ந்திருந்த