பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

133


அவருக்கு இந்திப் புதிய வம்பு திடீரெனப் பெரிய தலை வேதனையாகத் தோன்றியது.

“நீங்கள் தொழிலதிபர்! அதனால் பெரும் மூலதனத்தைத் தொழிலில் முடக்கியுள்ள பணக்காரர்களைப் பாதிக்கிற ‘பட்ஜெட்’டாகப் போட்டாலும் உங்களுக்குக்கெட்ட பெயர். பாமர மக்களைப் பாதிக்கிற ‘பட்ஜெட்’ போட்டாலோ அவர் பணக்காரர்–தொழிலதிபர்; அதனால் தனக்குச் சாதகமாக ‘பட்ஜெட்’டை போட்டுவிட்டார்”– என்று பத்திரிகைகளும்–மக்களும் பிரசாரம் செய்வார்கள். அதனால் இந்த முதல் பட்ஜெட்டை நீங்கள் மிகக் கவன மாக அமைத்து வெற்றிபெறவேண்டும்” என்று வேண்டிய நண்பர் ஒருவர் எச்சரித்திருந்தார். அது சம்பந்தமான கவலைகளில் அவர் ஆழ்ந்திருந்த போது இந்தப் பாழாய்ப் போன உண்மை ஊழியனின் பிளாக் மெயிலுக்கும் அஞ்ச வேண்டி வந்ததே என்ற வேதனை அவரை வாட்டியது. ‘சில சமயங்களில் மனிதனின் பதவிப் பெருமையும், பணபலமும் செல்வாக்கும் அவனுடைய அந்தரங்கமான பேடித்தனத்தை வளர்க்கவே பயன்படுகின்றன’–என்பதற்கு அவர் அப்போது நிதரிசனமான உதாரணமாயிருந்தார்.

‘பணமில்லாதவர்கள் தாங்கள் தைரியமாகவும் நிமிர்ந்து நிற்பவர்களாகவும்–இல்லாமற் போனதற்குத் தங்களிடம் பணமின்மை தான் காரணமோ என்று எண்ணுகிறார்கள், பணமுள்ளவர்களில் சிலரோ அதன் காரணமாகவே நிமிர்ந்து நிற்கவும்–தைரியமாக இருக்கவும் இயலாதவர்களாகத் தவிக்கவேண்டியிருக்கிறது. பணம்–பதவி–செல் வாக்கு எல்லாமே–அவற்றோடு சேர்த்துத்தன்னைப்பிரித்து விடாமல் காக்கும்–பயத்தையும் பேடித்தனமான பாதுகாப்புணர்வையும் தான் மனிதனுக்குள் வளர்க்கின்றன போலும்’

–இப்படி ஏதேதோ எண்ணியபோது–நிர்ப்பயமாக நேருக்குநேர் மேடையேறி நின்று–இப்படிப்பட்ட ஒருவரின் வெற்றியைத் தேசிய விரோத நிகழ்ச்சியாகக் கருதி வெறுக்கிறேன் நான்’–என்று கூறித் தனக்கு எருக்கம்பூ

நெ.–9