பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

135


கமலக்கண்ணன் எண்ணாமல் கொடுத்திருந்தாலும் கலைச்செழியன் பணத்தை அங்கேயே எண்ணத்தொடங்கி விட்டான்.

“ஏன்? எண்ணி என்ன ஆகப்போகுது? பேசாம எடுத்துக்கிட்டுப் போய் அழு”– என்று கமலக்கண்ணன் கூறியதையும் கேட்காமல் பொறுமையாக எண்ணி முடித்த அவன்,

“தவுலண்ட் இருக்குதுங்க”– என்று தயங்கினான்.

“இருக்குதில்ல...? கொண்டுபோய்க் கொடுத்துக் காரியத்தை முடி”–என்றார் அவர்.

“பத்தாதுங்களே! அவன் பெரிய விடாக்கண்டனாச்சே...ஒரு டூ தவுலண்ட் கூட இல்லீன்னா– சரிப்படாதே...”–என்று கலைச்செழியன் பேச்சை இழுத்தான்.

–‘உண்மையில் பார் பெரிய விடாக்கண்டன்’ என்று தெரியாமல் மலைத்தார் கமலக்கண்ணன் கலைச்செழியன் விடாக்கண்டனா அல்லது அவனாலே விடாக்கண்டனாகச் சித்திரிக்கப்படுகிற அந்த யாரோ ஒருவன் விடாக்கண்டனா என்று புரியாமல் அதை அவனிடமே துணிந்து கேட்டுவிடும் அளவுக்கு மன பலமும் இழந்து கையாலாகாத வெறுங்கோபத்தோடு இன்னும் ஒரு கட்டு நோட்டுக்களை எடுத்து மேஜையில் எறிந்தார் கமலக்கண்ணன்.

“கோபப்பட்றீங்களே? பார்க்கப்போனா உங்க பெருமையைக் காப்பாத்தறதைத் தவிர இதுலே எனக்கு வேறெந்த லாபமும் கிடையாதுங்க” என்று அந்த நோட்டுக் கற்றையையும் எடுத்து எண்ணத் தொடங்கினான். கலைச்செழியன். அவன் அதையும் எண்ணத் தொடங்கிய போது இயல்பாகலே அவருடைய பயம் அதிகரித்தது. எங்கே மேலும் கேட்கப் போகிறானோ என்று அவர் உள்ளம் நடுங்கியது. நல்லவேளையாக அவன் அவரை அப்படியெல்லாம் மேலும் துன்புறுத்தாமல் விட்டுவிட்டான்.

“நான் இதை வச்சு சரிக்கட்டிடறேனுங்க”–என்று. கூறிவிட்டுப் புறப்பட்டான். போவதற்கு முன், “இந்தாங்க... எதுக்கும் இது இங்கே இருக்கட்டும்”–என்று கையோடு மடித்துக் கசக்கிக் கொண்டு வந்திருந்த உண்மை ஊழியனை