பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
137
 

யிலிருந்து பத்துவரை கடம்பவனேசுவரர் திருப்பணிக்கூட்டம் நடந்தது. பத்துமணிக்கு அவசர அவசரமாக ஒருவாய் சாப்பிட்டுவிட்டு அவர் செகரெட்டேரியட் புறப்பட்டார். பதினொரு மணிக்கு–மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் குழு ஒன்றிற்குப் பேட்டியளிக்க வேண்டுமென்ற செய்தியைக் காரில் போகும்போதே நினைவுபடுத்தினார் காரியதரிசி, முதல் நாள் மாலைச் சம்பவம் உள்ளூர உண்டாக்கியிருந்த பலவீனத்தாலும் மன நலிவினாலும்–யாரைச் சந்தித்தாலும் எவரோடு பேசினாலும்–ஒரு தாழ்வு மனப்பான்மை அவருள் நிலவியது. எல்லாரும் தன்னைத் தாழ்வாக நோக்கி அந்தரங்கமாக எள்ளி நகை பாடிக்கொண்டே புறக்கோலமாக மரியாதையுடன் வணங் கினாற்போல் பாவிப்பதாகத் தோன்றியது அவருக்கு.

பன்னிரண்டரை மணிக்குத் துாதுக்குழுவினர் ‘தொழில் தவணைக்கடன் உதவி’–பற்றிய தங்கள் முறையீடுகளை எல்லாம் அமைச்சரிடம் கூறிவிட்டு வெளியேறினர். ‘லஞ்ச்’ ஒய்வு என்ற பேரில் அரைமணி கழித்துக் கொள்ள முடிந்தது. ஒன்றேகால் மணிக்குப் பத்துப் பதினைந்து பத்திரிகை நிருபர்கள் பார்க்க வரப்போவதாகவும்–அங்கேயே ஒரு சிறிய பிரஸ் கான்பரன்ஸுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் காரியதரிசி வந்து தகவல் தெரிவித்தார். முன்பே செய்துவிட்ட ஏற்பாட்டை மறுத்துப் பத்திரிகைக்காரர்களைப் பகைத்துக் கொள்ளக்கூடாதென்ற ஒரே காரணத்திற்காக மனம் தளர்ந்திருந்தும் அவர் அதற்கு இணங்க வேண்டியதாயிற்று.

நிருபர்கள் ‘பட்ஜெட் ஹேஷ்யமாக’–ஏதாவது வெளியிட அவர் வாயைக் கிளறிப் பார்த்தார்கள். ஒரு திருபர் அவரையும் வம்புக்கே இழுத்தார்.

“மதுவிலக்கில் உங்களுக்கு நம்பிக்கை இருக்க முடியாது...”

“ஏன் முடியாது?’’

“அதற்கில்லை...நீங்கள் நேஷனல் மூவ்மெண்ட்பீரியடில் இதையெல்லாம் கேலி செய்து நண்பர்களிடம் பேசி-