பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
138
நெஞ்சக்கனல்
 

யிருக்கிறீர்கள். ஆகவே ஒருவேளை மதுவிலக்கை எடுப்பதன் மூலம் கிடைக்கிற லாபத்தை பட்ஜெட்டுக்குப் பயன்படுத்தக் கூடுமல்லவா? மன்னிக்கவும்... உங்களிடம் அப்படி எதிர் பார்க்கிறார்கள் என்பது என் பணிவான அபிப்பிராயம்”

“ஹவ் டு யூ லே லைக் தட்” – என்று அந்த நிருபரிடம் கோபமாக இரைந்தார் கமலக்கண்ணன்.

‘தான் குடிப்பழக்கமுள்ளவன்’–என்று அந்தக் கேள்வியின் மூலம் அந்த திருபர் தனக்குச் சுட்டிக்காட்டுவது போல் உணர்ந்தார் அவர். அதனால்தான் அவருக்குக் கோபம் வந்தது. அப்போதிருந்த அவருடைய மனநிலையில் தன்னைக்கேட்கப்படும் ஒவ்வொரு கேள்வியும் தன்னை மட்டம் தட்டுவதற்கே என்ற உணர்வு அவருள் ஏற்பட்டிருந்தது.

“டோண்ட் கிவ் மச் இம்பார்ட் டன்ஸ் தட் க்வஸ்டின் எலோன், தட் இஸ் ஆன் ஆர்டினரி க்வஸ்டின் வித் ஆர்டினரி பேக்ரவுண்ட்ஸ்...” என்று அந்த நிருபர் எவ்வளவோ வற்புறுத்தியும் அது குத்தலான கேள்வியாகவே அவருக்குத் தோன்றியது. ஒவ்வொரு வரும் வேண்டுமென்றே சதிசெய்து காந்திராமன் செய்தது போலவே தன்னை ஒரு போலித் தேசியவாதியாக நிரூபிக்க முயன்று சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் அவருக்குப்பிரமைதட்டியது. ஒரு பலவீனம் இரகசியமாகப் பயமுறுத்தப்பட்ட தன். காரணமாக எல்லாப் பலவீனங்களையும் எல்லாருமே நினைவுவைத்துக்கொண்டு தன்னைக் குத்தலாகவும், கபடமாகவும் கேள்விகள் கேட்பதுபோல் அவருக்குதோன்றியது.

–ஒரு வழியாக பிரஸ் கான்பரன்ஸ் முடிந்தது. மூன்று மணிக்குத் தற்செயலாக ஒரு இன்விடேஷனை மார்க்செய்து டேபிளில் கொண்டுவந்து வைத்தார் காரியதரிசி.

‘மாயர்தேவியின் குறவஞ்சி நாட்டிய அரங்கேற்றம்... என்ற அந்த அழைப்பிதழைப் பார்த்ததும் சீறி விழுந்தார் அவர்.

“பட்ஜெட் பிரிபரேஷன் வேலை உயிர் போகுது. இதையேன் என் டேபிளில் கொண்டாந்து வைக்கிறே? நாட்டியமும்– நாடகமும் பார்க்க நேரமேது எனக்கு? தூர-