பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
139
 


எறி” என்று அந்த இன்விடேஷனைத் தூக்கிக் கிழித்தெறிந்தார் கமலக்கண்ணன். தன்னை ஒரு ஸீரியஸ்ஸான பதவிப் பொறுப்புள்ள மந்திரியாக எடுத்துக் கொள்ளாமல் எல்லா ருமே வெறும் உல்லாசப் பேர்வழியாக பழைய கமலக்கண்ணனாகவே– நினைக்கிறார்களோ? என்ற சந்தேகமும்–இந்தச் சந்தேகத்தின் விளைவான ஆத்திரமும் அவருள் புகுந்து பேயாய் ஆட்டின. காரியதரிசி அவருடைய கோபத்தைக் கண்டு மிரண்டு போனார் .

–மூன்றரை மணிக்கு பட்ஜெட் விஷயமாக ஒரு உயர்தர அதிகாரி–பழைய ஸிவில் சர்வீஸில் நீண்ட நாள் ஆபீஸராக இருந்து பழக்கப்பட்டவர்–கமலக்கண்ணனைப். பார்க்க வந்தபோது “சார் மினிஸ்டர் கோபமாக இருக்கிறார். தயவு செய்து அப்புறமா வாருங்களேன்”–என்று காரியதரிசி அவரைக் கெஞ்சினான். அவரோ கமலக்கண்ணனை விடக்கோபக்காரராக இருந்தார்.

“நான் ஒண்னும் எடுபிடி வேலைக்காரனில்லே. கோபதாபம் பார்த்துக் கூழைக் கும்பிடு போட்டு பக்ஷிஸ் கேக்க இங்கே வரலே. பேப்பர்கள் டிஸ்போஸ் ஆகாமே கிடக்குது கேட்கணும். எனக்கென்ன? நான் போறேன். எலெக்ஷன்லே யார் யாரோ மந்திரியா வந்துடறாங்க...கிரகசாரம்...”– என்று சாடிவிட்டுப் போனார். .

உடனே அவரைக் காலில் விழாக் குறையாக உபசரித்து உட்கார வைத்துவிட்டு–உள்ளே மந்திரியைப் பார்த்து அவர்வரவைக் கூறுவதற்கு விரைந்தார் காரியதரிசி. மந்திரியோ உள்ளே டேபிளில் தலை சாய்த்துக் கவலையில் ஆழ்ந்திருந்தார். காரியதரிசி என்ன செய்வதென்று தெரியாமல் தயங்கினார்.

12

டைசியில் தன்மேல் கோபப்பட்டுச்சீறி விழுந்தாலும்– விழட்டும் என்று–மேஜைமேல் தலை சாய்த்து உறங்கிக் கொண்டிருந்த மந்திரி கமலக்கண்ணனை எழுப்பி– வெளியே