உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

141




“டெல்லி மந்திரி ஒருத்தர் வருகிறார். நம்ம அரசாங்க சார்பிலே நீங்கதான் ஏர்ப்போர்ட்டிலே போய் ரெஸீவ் பண்ணனும்”...

“ஒ எஸ்... அப்படியே செய்யறேன் சார் ...”

“அது மட்டுமில்லே! ‘பிளானிங்’ அது – இது எல்லாம் வர்ரவரோட கையிலேதான் இருக்கு. ராஜ்பவனுக்கோ சென்ட்ரல் கெஸ்ட் ஹவுஸ்குக்கோ எங்கே போனாலும், அவர் கூடவே போய்க் க்னிவாகப் பேசி நம்ம ஸ்டேடுக்கு ஆகவேண்டிய நல்ல காரியங்களை மெல்ல அவர் மனசிலே பதிய வச்சுடனும்...சிக்கிரம் புறப்படுங்க...இன்னிக்கு டில்லி பிளேன் லேட்...ஆனாலும் அரைமணி முன்னாலே ஏர்ப்போர்ட் போயிடறது நல்லது.”

“நான் பார்த்துக் கவனிச்சுக்கிறேன் சார்!”

“அப்படியே நாளை–நாளன்னிக்கு உங்க பிஸினஸ் பீப்பிள்ட்ட எல்லாம் சொல்லி சேம்பர் ஆஃப் காமர்ஸ், எண்டர் பிரைஸர்ஸ் அசோசியேஷன்ஸ், எல்லாம் ஒரொரு மீட்டிங் போட்டு அந்த மந்திரியைப் பேசவச்சாக் கூட நல்லது... எல்லாம் கவனிச்சுச் செய்யுங்க.. நான்... இதோ ... இப்பவே முதல் டிரெயின்ல மதுரை புறப்பட்டுக்கிட்டிருக்கேன்...”

“நீங்க போயிட்டு வாங்க சார்! நான் கவனிச்சுக்கிறேன்...” என்றார் கமலக்கண்ணன்.

–உடனே காரியதரிசியைக் கூப்பிட்டு, “நீ அவசரமாப் பூக்கடைக்குப் போயி ஜீப்பிலே மாலை வாங்கிட்டு ஏர்ட் போர்ட்டுக்கு வா!... நான் இப்பவே புறப்படறேன்.. நேர மாக்கிடாதே ... பிளேன் வந்துடும் ... ஜல்தி’ என்று விரட்டி விட்டுப் புறப்பட்டார் கமலக்கண்ணன், இடைவழியில் வீட்டில் முகம் கழுவி உடைமாற்றிக்கொள்ள ஐந்து நிமிடங்கள் ஆயின. விமான நிலையத்திற்குக் கால்மணி முன்னாலேயே போய்விட்டார் அவர்.

ஏற்கெனவே அங்கே வழக்கமாக இம்மாதிரி வரவேற் புக்களுக்கு வரும் நகர் மேயர்,ஷெரீப் எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கத் தலைமைக் காரியதரிசி, போலீஸ் அதிகாரிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/143&oldid=1049054" இலிருந்து மீள்விக்கப்பட்டது