பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
142
நெஞ்சக்கனல்
 


இரண்டு மூன்று எம். எல். ஏக்கள் எல்லோரும் வந்திருந்தனர். பத்திரிகை நிருபர்கள் கூட்டம் ஒரு பக்கம் அலட்சியமாகவும், உல்லாசமாகப் பேசிச் சிரித்தபடியும் காத்திருந் தது. ஏர்போர்ட் லவுன்ச்சில் இருந்த பிரமுகர்கள் கமலக் கண்ணனைக் கண்டதும் உற்சாகமாக வரவேற்றனர். கமலக்கண்ணனும் அவர்களிடையே சென்று அமர்ந்தார்.

“சீஃப் மினிஸ்டர் முதல் டிரெயின்லே மதுரை போறார். நீங்க போய் ரெஸிவ் பண்ணுங்கன்னார். அதான் இப்படி அவசரமா வரவேண்டியதாச்சு. வர வர டெல்லி பிளேன்... மணிக்கணக்கா நாட்கணக்கா லேட்டாகுது போங்க...” என்று சம்பிரதாயமாகவும், பெரிய வியாபாரிக்குரிய அவசரத்துடனும், அலட்சியத்துடனும் பேச்சை ஆரம்பித்தார் கமலக்கண்ணன்.

“உலகத்திலே ஒவ்வொரு நாட்டுக்காரன் எதெதுலேயோ வளர்ச்சியடையறான்னா நாம லேட்டாறதுலேயாவது வளர்ச்சியடையப்பிடாதா; என்ன?”–என்று அசெம்பிளிக்கு வெளியேவந்தும் மறக்காமல் எதிர்க்கட்சிக்கேயுரிய குத்தல் மனப்பான்மையோடு கமலக்கண்ணனிடம் ஜோக் செய்தார் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர்.

–டில்லி விமானம் லாண்ட் ஆகி ரன்–வேயில்–சீறிப் பாய்ந்து வந்து நின்றது. கமலக்கண்ணன் மலையோடு விமானத்தை நெருங்கினார். பிர்முகர்களும் பின்தொடர்ந்தனர். மாலையிட்டு அறிமுகங்கள் முடிந்தபின், விமான நிலைய வி.ஐ.பி. ல்வுன்ச்சில் பத்திரிகை நிருபர்கள் டில்லி மந்திரியை வளைத்துக் கொண்டனர். அவர்களுடைய பிரஸ் கான்பரன்ஸ் முடிந்ததும்–தம்காரைப் பின்தொடருமாறு கூறிவிட்டு டில்லிமந்திரியுடன் ராஜ்பவன் சென்றார் கமலக்கண்ணன்.

சேதுசமுத்திரத் திட்டம், உருக்காலைத்திட்டம் பற்றி எல்லாம் டில்லி மந்திரி ஏதாவது பேசினால் பதிலுக்குக் கூறுவதற்குப் புள்ளிவிவரங்களை எல்லாம் அன்று சிரமப்பட்டுச் சிந்தித்து வைத்துக்கொண்டிருந்தார் கமலக்கண்ணன். எந்த விநாடியிலும் டில்லி மந்திரி சர்தார் ரமேஷ்சிங்ஜி அவற்-