பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
143
 

றைப்பற்றித் தன்னிடம் பேசத்தொடங்கலாம் என்ற பயம் காரில் போகும்போதே கமலக்கண்ணன் மனத்தில் இருந்தது. ஆனால் டில்லி மந்திரி ரமேஷ்சிங் ஒரே ஒரு தடவை தான் கமலக்கண்ணனுடன் ராஜ்பவன் போவதற்குள் பேசினார்.

“மிஸ்டர் கமலக்கண்ணன்! பிஃபோர் லீவிங் மெட்ராஸ் ஐ வுட்லைக் டூ ஸீ அட்லீஸ்ட் ஒன் பரத்நாட்யம் ஃபெர்பா மன்ஸ் ஹியர்... கேன் யூ அரேன்ஜ் ஃபார் மீ...” என்று மத்திய மந்திரி பரத நாட்டியம் பார்க்க ஆசை தெரிவித்த போது கமலக்கண்ணன் உருக்காலை, துறைமுகம் பற்றிய புள்ளி விவரங்களை அவசர அவசரமாக மறந்து–பரத நாட்டிய நாரீமணிகளை ஏற்பாடு செய்வதுபற்றி நினைக்கத் தொடங்கினார்.

“யெஸ்! ஐ கேன் அரேன்ஜ்...” –என்று உடனே இணங்கியது மன்றி உருக்காலை, சேது சமுத்திரம்– போன்ற சிரம சாத்தியமான சிந்தனைகளை மறக்க உதவி செய்ததற்காக மத்திய மந்திரிக்கு மனப்பூர்வமாக உள்ளே நன்றியும் செலுத்தினார் கமலக்கண்ணன்.

–ராஜ்பவனில் டெல்லி மந்திரி கவர்னரோடு டீ அருந்தி விட்டுப் பேசிக்கொண்டிருக்கும் போதே – கமலக்கண்ணன் டெலிபோனில் ஃபிலிம் எண்டர் பிரைஸர்ஸ் அசோசியேஷன் காரியதரிசியைக் கூப்பிட்டு, “டெல்லி மந்திரி ரமேஷ் சிங் இன்னும் நாலு நாள் இங்கே தங்கறார். அவர் இங்கே இருக்கறப்ப ஒரு பரதநாட்டியம் பார்க்கனுமாம். ஒரு ஈவினிங் உங்க அசோசியேஷன் சார்பிலே பார்ட்டி ஒண்ணும் கொடுத்து நாட்டியத்துக்கும் ஏற்பாடு பண்ணினா நல்லது. செய்வீங்களா?”–என்றார் கமலக்கண்ணன்.

“கட்டாயம் செய்யறோம் சார்! இப்படி ஒரு மகத்தான சந்தர்ப்பத்தை எங்களுக்கு அளிச்சதுக்காக நாங்க உங்களுக்கு ரொம்பக் கடமைப்பட்டிருக்கோம் சார்!”–என்று ஃபோனில் எதிர்ப்புறமிருந்து வெல்லப் பாகாய் உருகினார் பிலிம் வர்த்தக சபைக் காரியதரிசி.

“அப்ப நாளன்னிக்குச் சாயங்காலம் வச்சுக்கலாம். ஸிக்ஸ் தர்ட்டி டு ஸெவன் தர்ட்டி. என்கேஜ்மெண்ட்-