பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

145

கவும் கூடாது. நாளை மறுநாள்– சென்ட்ரல் மினிஸ்டருக்கு ஒரு லன்ச் அரேன்ஜ் பண்ணியிருக்கேன்! பெரிசா ஒண்ணுமில்லே. எல்லா லீடிங் இன்டஸ்டிரியலிஸ்டா மட்டுமே கூப்பிட்டிருக்கேன். மந்திரியையும் பார்த்துப் பேசினாப்பிலே இருக்கும் கட்டாயம் வந்திடுங்க” என்கிற பாணியில், அழைப்புக்களை அடுத்தடுத்து விடுத்தார். அரைமணிநேரத்திற்குள் நகரின் முக்கியஸ்தர்களுக்கும் பிரமுகர்களுக்கும் ஃபோன் செய்து தெரிவித்துவிட்டார் கமலக்கண்ணன்.

–மறுநாள் காலையில் வெளியான ஆங்கில தமிழ் தினசரிகளில் எல்லாம் முதல் நாள் மாலை கமலக்கண்ணன் விமானநிலையத்தில் ரமேஷ்சிங்குக்கு மாலை போட்டு வர வேற்ற புகைப்படம் வெளியாகியிருந்தது. வீட்டிலிருந்தே கெஸ்ட் ஹவுஸ் ஆட்களுக்கு ஃபோன் செய்து ரமேஷ்சிங் எழுந்திருந்ததும் பத்திரிகைகளை அவருக்கு அனுப்பு மாறும்... ‘தினக்குரல்’ தமிழ் பத்திரிகையைக் காட்டி, “இதை எங்கள் ஸ்டேட் மந்திரி கமலக்கண்ணன் ஆதரவுடன் நடத்துகிறார்கள்”–என்பதையும் தெரிவிக்குமாறும் கூறினார் கமலக்கண்ணன்.

–அன்றுமாலை...அதாவது டெல்லி மந்திரி வந்த இரண்டாவது நாள் மாலை...கட்சி அலுவலகத்திலே அவருக்கு ஒரு கூட்டம் இருந்தது. அத்தக் கூட்டத்திற்குப் போனால் மறுபடி காந்திராமனைச் சந்திக்க வேண்டி நேருமோ என்று கமலக்கண்ணன் தயங்கினார். ஆனால் போகாமலும் இருக்கமுடியாதென்று தோன்றியது. வந்ததிலிருந்து. கூடவே இருந்துவிட்டுக் கட்சிக்கூட்டத்துக்கு மட்டும் போக வில்லை என்றால் அதை யாராவது கவனித்து வம்பு பேசுவார்கள் என்றாலும் காத்திராமனின் முகம், எருக்கம் பூ மாலை, எல்லாம் நினைவு வந்து அந்த இடத்திற்குப் போவதற்கே பயத்தையும், தயக்கத்தையும் உண்டாக்கின. மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு வீட்டிலிருந்து தனியே. போகாமல் கெஸ்ட்ஹவுஸிலிருந்து மந்திரியுடனேயே புறப்பட்டு விட்டார். கட்சி அலுவலகத்தில் கூட்டம் அமைதியாகவே நடந்தது. ரமேஷ்சிங்கிற்கு நன்றாக ஆங்கிலம் தெரிந்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/147&oldid=1049058" இலிருந்து மீள்விக்கப்பட்டது