பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

147


இந்தியர்கள் தங்கள் மொழி வெறியாலேயே உலைவைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அருவருப்பாக இருந்தது. அவருக்கு. ஆனால் வெளிப்படையாக அப்படிச் சொல்லித் தமக்குப் பதவி கொடுத்திருக்கும் கட்சியைப் பகைத்துக் கொள்ளவும் கமலக்கண்ணன் தயாராயில்லை. . .

டிெல்லி மந்திரியிடம் தனியே பரஸ்பரம் குடும்ப செளக்கியங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது அவர் கமலக்கண்ணனிடம் கூறினார்:–

“எனக்கு இரண்டு பையன்கள்! ஒருத்தன் இங்கிலாந்துலேயும்; இன்னொருத்தன் அமெரிக்காவிலே மிக்சிகன் யூனிவர்சிடியிலும் படிக்கிறார்கள். யூ நோ... இண்டியன் எஜூகேஷன் ஸ்டாண்டர்ட் இஸ் வெரி வெரி புவர்...”

தன் குழந்தைகளைக் கவனமாக வெளி நாட்டில் ஆங்கிலச் சூழ்நிலையில் படிக்க வைக்கும். இதே மந்திரி ‘பாமர இந்தியர்கள் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன’ என்ற மனோபாவத்தோடு இந்தி வெறியுடனிருப்பதை உணர்த்தார் கமலக்கண்ணன். ஒரு கோமாளி போல் அபிப்பிராயங்களை உதிர்க்கும் அந்த டெல்லி மந்திரி– திறமை வாய்ந்த தென்னிந்தியப் பத்திரிகை நிருபர்களிடம் மாட்டிக் கொண்டு விழிப்பதைக் காண வேடிக்கையாயிருந்தது கமலக்கண்ணனுக்கு.

மறுநாள் பகலில் கமலக்கண்ணனின் பங்களாவில் ஒரு நவீன பஃபே முறை லஞ்சுக்கு ஏற்பாடாகியிருந்தது. மந்திரி ரமேஷ்சிங்குக்காகவே சூடாக நாலு பிளேட் சாம்பார் தனியே எடுத்து வைக்கச் சொல்லி சமையற்காரரிடம் கூறிவிட்டார் கமலக்கண்ணன். இந்தியின் மேலிருந்த காதலை விட டில்லி மந்திரிக்குத் தென்னிந்திய சாம்பார் மேல் அதிகமான காதல் ஏற்பட்டுக்கொண்டிருப்பதைக் கமலக்கண்ணன் இரண்டு தினங்களாகவே அவரோடு கூட இருந்து கண்டுபிடித்கிருந்தார்.

நகரத்தின் பெரிய பெரிய தொழிலதிபர்களும் பாங்குகளின் டைரக்டர் போர்டுத் தலைவர்களும் கமலக்கண்ணன் வீட்டு விருந்துக்கு வந்திருந்தார்கள். ஒவ்வொருவரையும் கவனமாக மறந்து விடாமல் மந்திரிக்கு அறிமுகப்படுத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/149&oldid=1049061" இலிருந்து மீள்விக்கப்பட்டது