பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/157

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

155

வேண்டும் போல நைப்பாசையாகத் தான் இருந்தது. ஆனாலும் மந்திரியாகி விட்ட நிலைமையை எண்ணித் தயங்கினார், பயப்பட்டார்.

“முன்னேமாதிரி நெனைச்சா வந்துடறகாரியமா மாயா? மந்திரியானப்பறம் எங்கே நம்ம இஷ்டப்படி முடியுது...?”

“ஊருக்குத்தான் இன்னிக்கி மந்திரி நீங்க, எனக்கு என். னிக்குமே நீங்க ராஜாதானே...?”

“அதிலே சந்தேகம் வேறேயா?”

“அதுசரி!அந்த பஸ்ரூட் விஷயம்என்னாச்சு? ‘பார்ட்டி’ இங்கேயே ‘கன்னிமரா’விலே ஒரு மாசமா வந்து குடியிருக்கானே! அவனுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்!”

“சீக்கிரமே காரியம் ஆகும்னு சொல்லு!”

எதிர்ப்புறம் கொஞ்சலாக நாலு வார்த்தை சொல்லி ஃபோனிலேயே அவரைத் திருப்திப் படுத்திவிட்டு மாயா ரிஸிவரை வைத்தாள். அந்த பஸ்ருட் விஷயமாக அவளுக்கு உதவி செய்ய வேண்டுமென்று கமலக்கண்ணனும் மனத்தில் நினைத்துக் கொண்டார். பல காரணங்களால் மாயாதேவியைப் பகைத்துக்கொள்ளவும் அவர் தயாராக இல்லை. அவர் மனம் வைத்தால் காதும் காதும் வைத்தாற் போல் அந்த பஸ் ரூட்டை மாயாதேவியின் ‘பார்ட்டிக்கு’ வாங்கிக் கொடுக்கவும் முடியும். அவர் நிலையில் அவருக்கு அது பெரிய காரியமில்லைதான்.

தேவையான காரியங்களைச் செய்து கொடுத்து யாருடைய பகைமையும் தவிர்க்க அவர் தயாராயிருந்தார். அந்தக் காந்திராமனே ஒரு காரியமாக உதவி வேண்டி வந்தால் கூட மற்றவர்களுக்குச் செய்து கொடுப்பதைவிட அவசரமாகவும், அவசியமாகவும் அவனுக்கு அதைச் செய்து கொடுத்து அவனது பகைமை என்ற நெருப்பை அவித்துவிட அவர் தயார் தான்! ஆனால் அவன் தேடி வரவேண்டுமே?

கட்சிக் கட்டுப்பாட்டினாலும் வலிமையினாலும் பட்ஜெட் விவாதத்தின் போது அசெம்பிளியில் கமலக்கண்ணனின் பெயர் கெட்டுப் போகும் படி எதுவும் நடந்துவிட வில்லை. கேள்விகளும், விவாதங்களும், கண்டனங்களும்