பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

நெஞ்சக்கனல்

எனக்கோ ஏற்பட்டதே இல்லையே! காந்திய சமதர்ம சேவா சங்கத்தின் ‘செக்’ கையெழுத்தானதும் ஸ்டெனோ இன்னொரு செய்தியையும் அந்தச் சங்கத்தோடு தொடர் புடையதாக அவருக்கு நினைவூட்டினாள். “அவர்களுடைய மூன்றாவது ஆண்டு விழா வருகிற வாரம் நடக்கப் போகிறதாம். அதற்கு நீங்கள் தான் தலைமை வகிக்க வேண்டுமென்று கடிதம் எழுதிக் கேட்டிருக்கிறார்கள் சார்! ‘செக்'கை அனுப்புமுன் கடிதத்தைப் படித்துப் பார்த்து விடுங்கள்” என்றாள். இதைச் சொல்லும்போதே அந்த ஆண்டு விழாவிற்குத் தலைமைதாங்க அவர் இணங்குவார் என்ற நம்பிக்கை நிச்சயமாக அவளுக்கு இல்லை. ஆனால் வாழ்க்கையிலேயே முதன் முறையாக அன்று ஒர் அதிசயம் நடக்கப்போகிறது என்று அவள் கண்டாளா என்ன? கூட்டம், சொற்பொழிவு, தலைமை, பரிசு வழங்கல் என்றாலே காததூரம் விலகி ஓடுகிற சுபாவம் அவருக்கு. வெட்கமும், பயமும், சபைக்கூச்சமுமே முக்கியமான காரணங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தம்மை விட்டுவிடுவதற்கும் சேர்த்து ஏதாவது நன்கொடை கொடுத்தாவது தப்பித்துக் கொள்வாரே ஒழியச் சிக்கிக் கொண்டு விடுவது அவர் வழக்கமேயில்லை. ‘ரோட்டரி கிளப்’ காரியதரிசியாயிருந்த காலத்தில்கூட ‘வெல்கம் அட்ரஸ்', ‘ஒட் ஆஃப் தேங்க்ஸ்’ போன்ற அயிட்டங்களை ஒர் ஆங்கிலப் பேராசிரியரிடம் எழுதி வாங்கிப் படித்து முடித்துவிடுவாரே தவிர மேடையிலே ‘எக்ஸ்டெம்போர்’ ஆகப் பேச வராது அவருக்கு, பரம்பரைப் பணக்காரர் குடும்பத்துக்குச் சில முறையான அடையாளங்கள் சென்னையில் உண்டு. ஆஸ்திகத்துக்கு அடையாளமாக கொஞ்சம் டோக்கன் பக்தி, கொஞ்சம் சங்கீத ரசனை, இரண்டு வருஷத்துக்கு ஒருமுறை வெளிநாட்டுப் பயணம், எதாவது ஒரு கல்லூரியில் நிர்வாகக் குழு உறுப்பினர் பதவி, தாய்மொழியில் கூடியவரை பற்றின்மை–சாத்தியமானால் அதன்மேல் ஒரளவு வெறுப்பு–ஏதாவது ஒரு சங்கத்தின் கெளரவ போஷகர் பதவி–வீட்டுக் குழந்தை-