பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

159


“நான் சொன்ன பார்ட்டிக்கு ஆர்டர் கிடைத்து விட்டது. உங்களுக்குத்தான் நான் ரொம்ப ரொம்பக் கடமைப்பட்டிருக்கேன்...லோ கைண்ட் அஃப். யூ”

“இந்த மாதிரி விஷயமாக இப்படியெல்லாம் நீ எனக்கு ஃபோன் பண்ணப்பிடாது மாயா? காரியம் ஆனாச் சரி தான். ஃபேர்ன்லே நான் இங்கிருந்து உன்னைக் கூப்பிடறதைப் போல நீயும் அங்கிருந்து என்னைக் கூப்பிடலாமா?. காதும் காதும் வச்சாப்பிலே ஒரு காரியம் முடியறதைக் கெடுத்துடாதே” என்று அவளைக் கடிந்து கொண்டார் கமலக்கண்ணன். மறுநாள் விமானத்தில் அவர் சென்னை திரும்பிவிட்டார். அன்றும் மறுநாளும் கொஞ்சம் ஒய்வெடுத்துக் கொள்ள முடிந்தது. இரண்டு நாட்களும் தொடர்ந்தாற் போல் அரசாங்க விடுமுறையாதலால் செக்ரட்டேரியட்டிற்குப் போகவேண்டிய அவசியமில்லை.

மூன்றாம் நாள் அதிகாலையில் கட்சித் தலைவர் பரபரப்பாக அவரைத் தேடி வீட்டுக்கு வந்தார்.

“என்ன இருந்தாலும் நீங்க இப்படிச் செய்திருக்கப் படாது. பொது வாழ்க்கையிலே இதுமாதிரி தாட்சண்யங்களே கூடாது.”

“எதைச் சொல்றீங்க? என்ன சொல்றீங்க? நீங்க சொல்றது எனக்கு ஒண்னுமே புரியலியே!”

“அந்தப் புலிப்பட்டி மணியத்துக்கு பஸ்ரூட் தரச் சொல்லி டிரான்ஸ்போர்ட் மினிஸ்டருக்கு ரெகமண்ட். பண்ணினிங்களே! அதைத்தான் சொல்றேன்...”

‘புலிப்பட்டியாவது, மண்ணியாவது, எனக்கு ஒரு எழவுமே தெரியாது; மாயாதான் சொன்னாள்...’ என்று பதில் சொல்ல நினைத்தவர் சட்டென்று நாக்கைக் கடித்து அதை அடக்கிக்கொண்டு,

“ஆமாம்! அதுலே என்ன தப்பு” என்று கேட்டார்.

“என்ன தப்பா? அந்தப் புலிப்பட்டி மணியம் பழைய கள்ளுக்கடை ஆள். கள்ளுக்கடை மறியலின் போது நாலு தேசியவாதிகளை அவன் கடை முன்னாடி அவனே ஆள் விட்டுக் கொலை பண்ணின கிராதகன். போதாதகுறைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/161&oldid=1049080" இலிருந்து மீள்விக்கப்பட்டது