பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

நெஞ்சக்கனல்


அந்த நாளைய ஜஸ்டிஸ் பார்ட்டி ஆள் வேறு. நீங்களும் முன்னாள் ஜஸ்டிஸ் பார்ட்டி ஆள். இவனும் பழைய ஜஸ்டிஸ் பார்ட்டிக்காரன். அதனாலே இதை வெளியிலே எப்பிடி எப்பிடியோ காது மூக்கு வச்சிப் பேசறாங்க. ‘அந்தரூட்டுக்கு அநுமதி கேட்டு எத்தனையோ நல்ல நல்ல அப்ளிகேஷன்லாம் இருந்தது சார்! ஆனா எனக்கு ஸீனியரா இருக்கிற ஒரு மினிஸ்டர் சிபாரிசு செய்யறப்பு நான் எப்படி மறுக்கிறதுன்னு அவரு சொன்ன ஆளுக்கே அனுமதி கொடுத்துட்டேன்’ என்று டிரான்ஸ்போர்ட் மின்னிஸ்டர் சொல்றாரு. சீஃப் மினிஸ்டருக்கும் இது விஷயம் நீங்க தலையிட்டுச் செய்ததின்னு தெரிஞ்சிருக்கு. அவரு எங்கிட்ட வருத்தப்படறாரு. அந்தப் புலிப்பட்டி மணியம் யாரோ சினிமாக்காரி மாயாவாமே; அவளுக்கு வேண்டியவனாம். அவ உங்களுக்கும் வேண்டியவள்னு கூடப் பேசிக்கிறாங்க...”

“ஷட் அப்! நான்சென்ஸ்...எனக்கு யாரும் வேண்டிய வங்கள்ல்லே! வேண்டியவங்களை வச்சுக்காலந்தள்ளனும்கிறதுக்கு நான் ஒண்னும் பஞ்சைப்பயல் இல்லே...” என்று கோபமாக அவரிடம் இரைந்தார் கமலக்கண்ணன்.

“நீங்க பெரிய கோடீஸ்வரர்தான்! ஆனாலும் பதவியிலே இருக்கிறப்ப பேர் கெட்டுடாமப் பார்த்துக்கனுமில்லியா?” என்று நறுவிசாகக் கூறிவிட்டு விடைபெற்றார் கட்சித்தலைவர். ஆனால் வந்தசுருக்கில் அவர் சட்டென்று பேசிக்கத்தரித்துக் கொண்டு போன விதம் கமலக்கண்ணனுக்கு என்னவோ போலிருந்தது. ஆள் யார், என்ன, என்பதைப் போன்ற விவரங்களைக் கேட்காமல் மாயா சொன்னதை மட்டுமே நம்பி பஸ்ரூட் விஷயமாகத் தான் தலையிட்டுச் சிபாரிசு செய்தது. பெரிய தவறென்றே அவருக்கும் இப்போது தோன்றியது. கட்சித் தலைவரே நேரில் வந்து கோபித்துக் கொண்டு பேசிவிட்டுப் போனதிலிருந்து இந்த பஸ்ருட் விஷயம் பெரிதாக உருவெடுக்கப்போகிறது என்ற பயம் இப்போதே கமலக்கண்ணனுக்கு வந்துவிட்டது.

‘அதுவும் இதே ருட்டுக்கு அனுமதி வேண்டிக் கட்சி நலனில் அக்கறையுள்ள நியாயமான தேசியவாதிகளிட-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/162&oldid=1049081" இலிருந்து மீள்விக்கப்பட்டது