பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

நெஞ்சக்கனல்


நிர்வாகம் செய்திருக்கிறீர்கள். இதில் போய் அவசரப் பட்டுத் தப்பான ஆளுக்குச் சிபாரிசு செய்துவிட்டீர்களே? டிரான்ஸ்போர்ட் மினிஸ்டர் இளைஞர். பதவிக்குப் புதியவர். உங்களைப் போலக் காபினட்லே இரண்டாவது இடத்திலே இருக்கிற மந்திரி சொன்னதும் யாரையும் கேட்காமல் நீங்க சொன்னவருக்கே ஆர்டர்ஸ் கொடுத்து அனுப்பிவிட்டார். இப்ப என்னடான்னா ஏகப்பட்ட கலவரமாயிருக்கு. பார்ட்டி ஆபீஸ்லே ஒரே கொந்தளிப்பு. ஒரு தகுதியுள்ள நல்ல ஆளுக்கு இதைக் கொடுத்திருந்தா பார்ட்டி ஆளுங்களைக்கூட நீங்க இதிலெல்லாம் தலையிடாதீங்கன்னு: நானே கண்டிச்சு அனுப்பிடுவேன். ரூட்டுக்கு அநுமதி வாங்கிட்டுப் போயிருக்கிறவனோ முதல் நம்பர் அயோக்கியன். கொலைகாரன்...இதே ரூட்டுக்கு அப்ளை பண்ணின பத்து நல்லவனும் இப்ப சண்டைக்காரனா மாறி–ஆட்களைக் கிளப்பி விடறான்கள். நாளையே பத்திரிகைக்காரர். களைத் தேடி இதைப்பற்றி எழுதச் சொல்லுவார்கள். எப்படி சமாளிப்பதென்றுதான் தெரியவில்லை...”

“தவறுதான் சார்! ஆனால் என்னை அறியாமல் நடந்துவிட்டது.”

“எப்படி அது...சாத்தியம்? உங்களை அறியாம. எப்பிடி நடக்கும்?”

கட்சித் தலைவரிடம் மறைத்தது போல முதலமைச்சரிடம் உண்மையை மறைக்க விரும்பாமல், “எனக்குத்தெரிஞ்ச ஒருத்தர் இந்த ஆளுக்காகச் சிபாரிசு பண்ணினார். நான் பண்ணின ஒரே தப்பு இந்த ஆள் யாருன்னு கேட்காமலே டெல்லியிலிருந்து டிரான்ஸ்போர்ட் மினிஸ்ட்டருக்கு ஃபோன் பண்ணிவிட்டேன்...” என்று ஒருவிதமாகக் கூறி விட்டார் கமலக்கண்ணன். இதை கேட்டுச் சில விநாடிகள் ஏதோ யோசனையிலாழ்ந்தார் முதலமைச்சர். பின்பு பெரு மூச்சு விட்டுவிட்டு, “இதெல்லாம் வெளியிலே இருக்கிறவனுக்குத் தெரியாது. அவன் பாட்டுக்கு மந்திரி கமலக் கண்ணனும் முன்னாள் ஜஸ்டிஸ் ஆள்–ரூட் வாங்கியிருக்-