பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/168

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

நெஞ்சக்கனல்


“அப்பிடித்தான் செய்யணும்! ஏற்பாடு பண்ணி கமிட்டியும் போட்டு அறிக்கை விட்டுப்பிட்டா அப்புறம் எப்படி மறுக்கத் தோணும்கிறேன்?”

மறுநாள் தினக்குரவில் முதல் அமைச்சரின் சிலை நிறுவும் கமிட்டியைப் பற்றி முதல் பக்கத்தில் பிரசுரமாகியிருந்தது.

கமலக்கண்ணன் இந்தச் செய்தியைத் தினக்குரலில் காலை ஏழரை மணிக்குப் படித்தார். முதலமைச்சர் காலை ஐந்து மணிக்கே எழுந்திருந்து விடும் பழக்க முடையவராகையால் அவர் அதை ஆறு–ஆறரை மணிக்கே படித்திருக்க முடியும் என்று அநுமானித்துக் கொண்டார் கமலக்கண்ணன், ஐந்தரை– ஐந்தேமுக்கால் மணிக்குள் முதலமைச்சர் வீட்டுக்கு எல்லாத் தினசரிகளும் போடப்பட்டுவிடும் என்பதை அவர் அறிவார். முதலில் இந்து, எக்ஸ்பிரஸ், தினமணி, படித்துவிட்டு அப்புறம் தினக்குரலை எடுப்பார் என்று கற்பனை செய்தது கமலக்கண்ணன் மனம், அவர் இவ்வாறு நினைத்துக் கொண்டிருந்த போதே டெலிபோன் மணி சீறியது. ஒடிப்போய் எடுத்தார் கமலக்கண்ணன். அவ்வளவு அதிகாலையில் வழக்கமாக மற்றவர்கள் எடுத்து யாரென்று கேட்டு அவரிடம் டெலிபோனைக் கொடுப்பது தான் நடைமுறை. அன்று ஏதோ சந்தேகமான ஆவலுடன் அவரே எடுத்தார்.

எதிர்ப்புறம் முதலமைச்சரின் குரல் சிறியது, “இதென்ன அபத்தம் உடனே நிறுத்திட்டு மறுவேலை பாருங்க...சிலையாவது மண்ணாங்கட்டியாவது: அதெல்லாம் விவேகாநந்தர், காந்திஜி, நேதாஜி போன்றவர்களுக்கு வைக்கவேண்டியது. நான் சாதாரணத் தொண்டன். குறைகளும் நிறைகளும் கலந்தவன், மனிதனைத் தெய்வமாக்குவது அற்பத் தனம். தெய்வங்களின் சிலைகளைப் பகுத்தறிவின் பெயரால் ஏளனம் செய்துவிட்டு மனிதர்கள் தங்களுக்குச் சிலைகள் வைத்துக் கொள்கிறமடமையை வெறுப்பவன் நான். ‘பஸ்ரூட்’ ப்ளண்டர் ஒண்ணு போதும். அதைச் சரிசெய்யறதா நெனச்சுக்கிட்டு அதைவிடப் பெரிய ப்ளண்டரை ‘கமிட்’