பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

நெஞ்சக்கனல்


போஸ்டரோ தன் சம்பந்தப்பட்டதென்று அவரது மனக்குறளி கூறியது. ‘பஸ்ருட் ஊழல்’ கண்டனக் கூட்டம். பிரபல தேசபக்தர் காந்திராமன் தலைமையில் நடைபெறும்’– என்று சுவரொட்டியில் கண்டவற்றை வந்து அப்படியே ஒப்பித்தான் தோட்டக்காரன். அவருடைய மனத்தில் பதற்றமும், பரபரப்பும் அதிகமாயின.

“முடிஞ்சா இன்னிக்கிச் சாயங்காலம் அந்தக் கூட்டத்துக்குப் போயி என்னபேசுறாங்கன்னு கேட்டுக்கிட்டுவா...”–என்று தோட்டக்காரனிடம் அந்தரங்கமாகச் சொல்லி வைத்தார். அவர் அவனும் சரியென்று தலையாட்டினான்.

நடுப்பகலில் புலவர் வெண்ணெய்க்கண்ணனார் கமலக்கண்ணனைப் பார்க்க வந்தார். அவர் கையில் காந்திராமன் நடத்தும் பத்திரிகை இருந்தது. அந்தப் பத்திரிகையைப் புலவர் கைகளில் பார்த்ததுமே கமலக்கண்ணனுக்கு வயிறெரிந்தது. “சர்வோதயக் குரலா அது? அதை ஏன் கையிலே வச்சுக்கிட்டிருக்கீரு” என்று புலவரை வினாவினார்.

“பாருங்க... உங்களுக்குக் காண்பிக்கத்தான் வாங்கிக் கொண்டு வந்தேன்” என்று புலவர் அந்தப் பத்திரிகையையே கமலக்கண்ணனிடம் நீட்டினார். மனமும் கைளும் பதறி அதை வாங்கினார் கமலக்கண்ணன்.

அந்தப் பத்திரிகையில் கார்ட்டூனிலிருந்து தலையங்கம் வரை எல்லாவற்றிலும் கமலக்கண்ணனைக் கடுமையாகத் தாக்கியிருந்தார்கள்.

‘குரங்கு கையில் பூமாலை’ என்று ஒரு கேலிச் சித்திரம். அதில் கமலக்கண்ணனைக் குரங்காகவும்–பூமாலையில் உள்ள மலர்களைத் தேசிய லட்சியங்களாகவும் உருவகம் செய்திருந்தது. தலையங்கத்தில் ‘பஸ்–ரூட்’ விஷயம் கடுமையாகத் தாக்கப்பட்டுக் கமலக்கண்ணன் சூடுசுரணையோ, மானமோ உள்ளவராக இருந்தால் உடனே இராஜிநாமா செய்யவேண்டுமென்றும் கோரப்பட்டிருந்தது. அதில் ஒரு ‘பாரா’ இப்படி இருந்தது.

“தன் லட்சியங்களில் நம்பிக்கையில்லாத ஒருவரைப் –பணபலத்துக்காகக் கட்சியில் ஏற்பதும்–பதவியளிப்பதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/170&oldid=1049481" இலிருந்து மீள்விக்கப்பட்டது