பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
170
நெஞ்சக்கனல்
 அடுத்த வார சர்வோதயக்குரலில் ‘முதலமைச்சருக்குச் சிலை– காக்கை பிடிக்கும் முயற்சியா?’ என்று தலையங்கம் வந்திருந்தது. இதே செய்தியைப் பொதுக் கூட்டத்திலும் காந்திராமன் பேசியதாகக் கூட்டம் நடந்திருந்த தினத்தின் மாலையிலேயே தோட்டக்காரன் கேட்டுக்கொண்டு வந்து கமலக்கண்ணனிடம் தெரிவித்திருந்தான். இப்போது ஐந்து நாட்களுக்குப் பின் அதையே தலையங்கமாக எழுதியிருந்தார் காந்திராமன். கமலக்கண்ணனுக்கு அவருடைய சக காபினட் மந்திரிகளிடமே நல்ல பெயர் போய்விட்டது. அவரை இலட்சியம் செய்யாதது போல் அவர்கள் நடந்து கொள்ளத் தலைப்பட்டார்கள். பஸ்ரூட் விஷயம் அளவுக் கதிகமாகப் பெரிது படுத்தப்பட்டு விட்டது. சில மஞ்சள் பத்திரிகைகள் இதில் மாயாதேவியையும் சம்பந்தப்படுத்தி எழுதின. அபவாதம் தனியே வருவதில்லை போலும். முதலமைச்சருக்குக் கமலக்கண்ணனைப் பற்றி ஏராளமாக தந்திகள் பறந்தன. பொதுமக்களின் சக்தி இவ்வளவு கடுமையாக இருக்க முடியுமென்று அவருக்கு இதற்கு முன் எப்போதுமே தெரிய வாய்ப்பிருந்ததில்லை. காந்திராமன் தலைமையில் கட்சியின் நீண்டகாலத் தலைவர்கள் பலர் முதலமைச்சரிடம் தூது போய்ப் பேசியதாகவும் ஒரு தகவல் கமலக்கண்ணனுக்குத் தெரிய வந்தது. உண்மையில் அந்த ‘பஸ்ரூட்’ விஷயத்தை அவர் செய்யாமலே விட்டிருக்கலாம். யாருக்கு அதைச்செய்கிறோம் என்பது தெரியாமலே அதை மாயாவுக்காகச் செய்யப்போக இப்படி ஒரு பெரிய எதிர்ப்புச் சூறாவளியில் சிக்க நேரிடுமென்று அவர் கனவிலும் . நினைக்கவில்லை, பார்க்கப்போனால் இது டிரான்ஸ் போர்ட் மந்திரி விவகாரம். ஆனால் எப்படியோ பழி கமலக்கண்ணனையே சரியாகத் தேடி வந்தது. ‘டிரான்ஸ் போர்ட் மந்திரி இதில் நிரபராதி’ – என்பது போலாகி விட்டது. பத்திரிகைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கமலக்கண்ணனைச் சரியாகப் பழி வாங்கின. அவர் செய்த சிலை முயற்சியில் முதலமைச்சர் வேறு அவரை வெறுக்கத் தொடங்கியிருந்தார். ரூட் கிடைக்காத மற்ற-