பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

நெஞ்சக்கனல்


15

மலக்கண்ணனுடைய செல்வாக்கில் இருண்ட நிழல் படிந்து கொண்டிருந்த அந்த வேளையில் ஒருநாள் மாலை– கலைச்செழினும், பிரகாசமும் மாயாவின் வீட்டில் சந்தித்தார்கள்.

“பாவம்! என் வார்த்தைக்காக அவரு இந்த பஸ்ரூட் விவகாரத்திலே தலையிடப் போய்ப் பேரைக் கெடுத்துக்கிட்டாரு” என்று மாயா அவர்களிடம் கமலக்கண்ணனைப் பற்றிப் பரிதாபப்பட்டாள். பிரகாசம் குறுக்கிட்டான்:–

“அதெல்லாம் அவர் சரிக்கட்டிடுவாரு...சீஃப் மினிஸ்டருக்குச் சிலை வைக்க ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்காரு... எல்லாம் அதுலே சரியாயிடும்...”

“அதுதான் சீஃப் மினிஸ்டரே தனக்குச் சிலை வேண்டாம்னிட்டாராமே? சிலை வைக்கிற ஏற்பாட்டைக் கைவிட்டுட்டதாக உங்க ‘தினக்குரல்’லியே அறிக்கை வந்திட்டுதே? அப்புறம் எப்படி அவரைச் சரிக்கட்டறது?’’ என்று உடனே பதிலுக்குக் கேட்டான் கலைச்செழியன். பிரகாசம் இதை ஒப்புக் கொள்வில்லை.

“அதெல்லாம் சும்மா ஒரு ஐ வாஷ்...நீ பார்த்துக்கிட்டே இரு...நம்பளவரு சிலைவச்சி முடிக்கிறாரா இல்லையான்னு...?”

“இனிமே அது நடக்காது பிரகாசம்! கமலக்கண்ணன் வீட்டுவாசலிலேயே ஒருத்தன் உண்ணாவிரதம்னு போர்டு மாட்டிக்கிட்டுக் கூடாரமடிச்சிட்டான்...விஷயம் பெரிசா யிடிச்சி. தினசரி– உண்ணாவிரதம் நாலாவது நாள், அஞ்சாவது நாள்னு போர்டு மாத்தி மாத்தி எழுதிக்கிட்டிருக்கானுக...”

“சே! சே! கேக்கறப்ப எனக்கே மனசுக்குச் சங்கடமா இருக்கு. நான் இந்தச் சிபாரிசுக்கு அவரிட்டப்போயிருக்கப் படாது”–என்று வருத்தப்பட்டுக் கொண்டாள் மாயா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/176&oldid=1049493" இலிருந்து மீள்விக்கப்பட்டது