176
நெஞ்சக்கனல்
“எலக்சனுக்கு நின்னப்பவே முதல்லே அவங்க இவருக்கு ‘பார்ட்டி டிக்கெட்’ கொடுக்கலே, சுயேச்சையா நின்று நிறைய செலவழிச்சு ஜெயிச்சாரு மந்திரி பதவிக்காகத் தான்.அப்புறம் பார்ட்டியிலே ஜாயின் பண்ணினாரு. அப்பவே தேசியக் கட்சியிலே ஏகப்பட்ட கசமுசல் இருந்திச்சு. ‘வெள்ளைக்காரனுக்கு அடி வருடின குடும்பத்தைச் சேர்ந்த ஆளு’–ன்னு எல்லாரும் ஒரு தினுசாத்தான் பேசினாங்க...அது கடைசியிலே இப்படி ஆயிரிச்சி...”என்று அலுத்துக்கொண்டான் கலைச்செழியன். அவர்களுடைய கவலை எல்லாம் கமலக்கண்ணன் தங்களுக்கு இனிமேல் பயன்படுவாரா–பயன்படமாட்டாரா என்பதைப் பற்றியதாகத் தான் இருந்ததே ஒழியக் கமலக்கண்ணனுக்கு வந்திருக்கும் துன்பங்களை எண்ணி வருந்துவதாக இல்லை. மாயாவுக்கு மட்டும்தான் மனத்தில் கொஞ்சம் ஈரம் இருந்தது. பெண்ணாகப் பிறந்து விட்ட காரணத்தினால் அவள் அவர்களைப் போல் ஈரப் பசையில்லாமல் வறண்ட மனத்தினளாக இருக்க முடியவில்லை. பிரகாசமும், கலைச் செழியனும் நூற்றுக்கு நூறு சதவிகிதம் காரியவாதிகள். தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்ள அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் காரியங்கள் நடக்காதென்று தெரிந்தால் –அவை வேறு எங்கு நடக்குமோ அங்கே தேடிக்கொண்டு போய்விடுவார்கள். இது மாயாவுக்கு மிகவும் நன்றாகத் தெரியும். ஆனால் அவர்களை ஈர்ப் பசையுள்ளவர்களாக மாற்றுவதென்பது மாயாவினால் மட்டுமல்ல; கடவுளால்கூட முடியாது– என்பது உறுதி வாழ்க்கையின் இந்தத் துறைகளில் அவர்களின் நியதியே இதுதான். ஆனால் மாயாவின் நிலை அப்படியில்லை. அவள் கமலக்கண்ணனுக்காக உண்மையிலேயே வருத்தப்பட்டாள். கலைச்செழியனும், பிரகாசமும் வந்து சொல்லியதன் பேரில்தான் புலிப்பட்டி மணியத்தின் பஸ்ரூட் விஷயத்தில் அவள் தலையிட்டாள். அதனால் கலைச்செழியனுக்கும், பிரகாசத்துக்கும் பெரும் பயன் ஏற்பட்டிருக்கும் என்பது அவளுக்குத்தெரியும். ஆயினும் எந்த ஏணியில் மேலே ஏறி-