பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

நெஞ்சக்கனல்


“நீங்க சொன்னதையெல்லாம் நான் உடனே செஞ்சிருக்கேன். இப்ப நான் ஒரு கஷ்டத்திலே இருக்கறப்பநீங்க தான் தயங்காம உதவ முன் வரணும். அந்த நம்பிக்கை யோட தான் உங்களுக்கு இப்ப ஃபோன் பண்றேன்”

“அது சரிதான்! இல்லேங்கலியே...ஆனா...உதவ முடியாத எல்லைக்குப் போனப்பறம் வந்து சொல்றீங்களே? இனிமே என்ன செய்யறது? சீஃப் மினிஸ்டரு ரொம்பப் பிடிவாதக்காரரு. அவரு வளைஞ்சு கொடுப்பாருன்னு. எதிர்பார்க்கறதுலே பிரயோசனமில்லே...”

“பார்ட்டி ஆபீஸ் மூலமா எதுவும் பிரஷர் கொடுத்தாக்கூடவா நடக்காது?”

“பார்ட்டி ஆபீஸ்லே முக்காவாசிப் பேர் உங்களுக்கு டெட் எகெயின்ஸ்ட்டா’வில்லே இருக்காங்க...உங்க நிலைமை நல்லாப் புரியுது...ஆனாலும் என்ன செய்யறதுன்னு தான் தெரியலை...”

“யாருக்கும் எதுவும் செய்யனும்னாலும்...செய்திடலாம்.இந்த அஞ்சு வருஷத்தை நிம்மதியாகக் கழிச்சிட்டா அப்புறம் கவலையில்லே...”

“பார்க்கலாம்! நானே உங்களுக்கு மறுபடியும் ஃபோன் பண்றேன்”– என்று கூறி ஃபோனை வைத்து விட்டார் பிரமுகர்.”

‘–ரூட்’ கிடைக்காமல்–ஏமாறிய விண்ணப்பதாரர்கள் கடுங்கோபத்துடன் கமலக்கண்ணனைப் பதவியிலிருந்து இறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். காந்தி ராமன் போன்ற அசல் காந்திய வாதிகள் கமலக்கண்ணனைத் தீர்த்துக்கட்டி வெளியில் அனுப்ப வேண்டிய முயற்சிகளைச் செய்து வந்தனர். முதலமைச்சரோ கமலக்கண்ணன் மேல் இன்னும் கோபம் தணியாதவராகவே இருந்தார். உண்ணாவிரதம் இருந்த ஆளைச் சுற்றிக் கமலக் கண்ணனின் வீட்டின் முன்புறம் தினசரி ஒரு பெரிய கூட்டம் கூடுவதும், கோஷங்கள் இடுவதும் வேறு வழக்கமாகியிருந்தது. உண்ணாவிரதக் காரருக்காகப் போடப்பட்டி’ ருந்த கீற்றுக் கூடாரத்தில் தேசியக் கட்சியின் கொடிதான் பறந்தது. அந்தக் கட்சியில் உறுப்பினராக இருக்கும்