பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/182

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

நெஞ்சக்கனல்


“டோண்ட் மிஸ்டேக் மீ...ஐ காண்ட் ஹெல்ப்யூ இன் திஸ் மேட்டர்...”


“நான் என்ன செய்யனும்கிறதையாவது சொல்லுங்க? பார்ட்டிக்காக நான் எவ்வளவோ செஞ்சிருக்கேன்...”

“இருக்கலாம்...அதுக்கு என்ன இப்ப? திஸ் இஸ் செப்பரேட் இஷ்யூ...”

“என் எதிர்காலம்...”

“பார்ட்டி வில் டிஸைட்...

“நோ.டோண்ட் டாக் லைட் தட்...யூ மஸ்ட் ஹெல்ப் மீ...”

“ஐ காண்ட்...”

“டூ யூ ப்ரஃபெர் மை ரெஸிக்னேஷன்...”

“அஃப் கோர்ஸ் பார்ட்டி வில் டிஸைட் இட்...”

“..................”

– கமலக்கண்ணன் எழுந்து கைகூப்பி விடைபெற்றார். இனி அதிகம் பேச எதுவுமில்லை. தளர்ந்த நடையோடு முதலமைச்சர் வீட்டு போர்டிகோவில் நின்ற தம் காரில் வந்து ஏறிக்கொண்டார் அவர்.


அவர் வீடு திரும்பியபோது வராண்டாலில் புலவர் வெண்ணெய்க்கண்ணனாரும்– வேறோர் ஆளும் வந்து காத்திருந்தனர்.

“இவருதான் சிலைச்சிற்பி சிங்காரம். நம்ம முதலமைச்சர் சிலைக்காக இவரைக் கூப்பிட்டுக்கொண்டு வந்தேன். கர்மவீரர் கனகராசர் சிலை, சீர்திருத்தச் செம்மல் செங்கமலனார் சிலை, ஆன்மீக வள்ளல் அருளாநந்தர் சிலை எல்லாம் இவரு செய்ததுதாங்க...”

“நீர் பேப்பரே பார்க்கிறதில்லையா புலவரே...”

“ஏன்? என்ன செய்தி?”

“சிலை ஏற்பாடு கைவிடப்பட்டதுன்னு நான் அறிக்கைவிட்டு ஏழெட்டு நாளாவுதே”

“ஏன்...ஏன்?...”

“போய்ப் பேப்பரைப் படியும்! சும்மா வந்து உசிரை எடுக்காதீரும். எனக்கு வேற வேலை இருக்கு”–என்று அது