பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/183

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

181


வரை அடக்கி வைத்திருந்த கோபத்தை அவரிடம் வெளிக்காட்டினார் கமலக்கண்ணன்.


புலவரும் ‘சிலை சிங்காரமும்’ மூச்சுவிடாமல் திரும்பி நடையைக் கட்டினார்கள்.

உள்ளே அறையில் புகுந்து கதவைச் சாத்திக்கொண்டு கண்ணாடி அலமாரியைத் திறந்து பிராந்தியை எடுத்தார் கமலக்கண்ணன். கதவைத் திறந்து கொண்டு மனைவி உள்ளே வந்தாள்.

“ஏன் இதுக்காகக் கிடந்து மாயlங்க...! வீட்டு வாசல்லே தலை காட்ட முடியலே. உண்ணாவிரதமும் ‘ஒழிக’வும் ஒய்ந்த பாடு கிடையாது. சனியன் பிடிச்ச பதவியை விட்டுத்தலை முழுகுங்க...ஏதோ வந்தது... இப்போ போகுது... நமக்கெதுக்கு இந்த எழவெல்லாம்...? இருக்கிற பிஸினஸைச் சரியாகக் கவனிச்சாலே போதும்...”–என்று ஆறுதலாகக் கூறினாள் அந்த அம்மாள். மோவாயில் வழிந்த பிராந்தியைத் துடைத்துக் கொண்டே படுக்கையில் சாய்ந்தார் கமலக்கண்ணன். அந்த அம்மாள் இந்த வேளையில் அவரிடம் பேசிப் பயனில்லை என்பது போல் கதவைச் சாத்திக்கொண்டு போனாள். . . .

வெளியே ஹாலில் டெலிபோன் மணி அடித்தது. அந்த அம்மாள் டெலிபோனை எடுத்தாள்.

“ஐயா இருக்காருங்களா?...நான்தான் ‘தினக்குரல்’ மானேஜர் பிரகாசம் பேசறேன்...”

“லயன்ல இருங்க. உள்ளே படுத்திருக்காரு. அந்த ரூம் எக்ஸ்டென்ஷனுக்குப் போடறேன்” என்று பதில் சொல்லிவிட்டு–எக்ஸ்டென்ஷன் மணியை அழுத்தினாள் மிஸஸ்,கமலக்கண்ணன்,

உள்ளே படுத்திருந்த கமலக்கண்ணன் தலைப்பக்கமாக இருந்த டெலிபோனை எடுத்தார்.

“யெஸ்..”

“நான் தான் பிரகாசம் பேசறேன் சார்...நாளைக்கு ஸாலரி டேட்...சம்பளம் போடணும்...”

நெ –12