பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/184

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

நெஞ்சக்கனல்


“எங்கே...? உன்னை இரண்டு மூணு நாளா இந்தப் பக்கமே காணோம்?”

“அதான் இன்னிக்கி வரலாம்னு ஃபோன் பண்ணினேன் சார்”

“பணம் தேவையாக்கும்...அதான் வரவேண்டிய அவசியம் வந்திருக்கு...இல்லையா?...”

“அதுக்கில்லை சார்! நியூஸ் பிரிண்ட் கிளியரன்ஸ்... புது ரோடரி மிஷின்..பிரஸ் ஒர்க்கர்ஸ் ஸாலரி, எல்லாம்... பாக்கி இருக்கு...”

“இன்னிக்கு என்ன தேதி...?”

“முப்பதுங்க...”

“ஒண்ணாந்தேதி சம்பளம் கொடுக்கறப்ப– த்ரீ மந்த்ஸ் நோட்டிஸுக்குப் பதிலா எல்லாருக்கும் மூணு மாசச் சம்பளமாகக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவை. பத்திரிகை ரெண்டாந் தேதியோட நிக்கட்டும். பேப்பர் நடத்திக் கிழிச்சது போரும். அச்சடிச்ச பேப்பரை விக்கிறதை விட அச்சடிக்காத வெள்ளைப் பேப்பர் விற்கிறதுக்கு ஒரு கடை திறந்தா லாபமாவது வரும்...”

“சார்...சார்...! அவசரப்ப்டாதீங்க... இத்தனை கோபம் எதுக்கு எதுக்கும் பொறுத்துச் செய்யலாம். பாலிடிக்ஸ்லே எல்லாம் உண்டு சார் ...வெற்றி– தோல்வி எல்லாம் சகஜம். பத்திரிகை ஒண்ணு கையிலே இருந்தாத் தோல்வியைக்கூட வெற்றியா மாத்திக்க முடியும் சார்...அவசரப்பட்டுடாதீங்க...”

“உங்ககிட்ட யோசனை கேக்கலை. சொன்னதைச் செய்யி. ஹூ ஆர் யூ டு அட்வைஸ் மீ?”

“சார்...நான் சொல்ல வந்தது என்னன்னா...”

எதுவும் சொல்ல வேண்டாம். கம் அண்ட் மீட் மீ த்ரீ ஓ க்ளாக் டு–டே ஐ வில் கிவ் யூ எ செக்...எல்லாம் செட்டில் பண்ணிட்டு – நாளைக்கிப் பேப்பர்லே பத்திரிகை இரண் டாம் தேதிக்கு மேலே வராதுன்னும் போட்டுடு. ஏஜண்ட்ஸீக்கு எல்லாம் ‘டிபாசிட்டை’ திருப்பி அனுப்பிடு! ஐ வில் ஸ்டாப் தி ஹோல் டிராமா–”