பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

183


“....ஒ...கே...சார்”– பிரகாசம் இனிமேல் அவருடன் பேசுவதில் பயனில்லை என்பதை... போனில் ஒலித்த அவரது குரலிலிருந்தே தெரிந்துகொண்டான். இது அவன் எதிர்பார்த்தது தான் என்றாலும், இவ்வளவு விரைவாக அவன் எதிர்பார்க்கவில்லை. கமலக்கண்ணன் தமது பதவியைப் பற்றி ஏதோ ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டுமென்பதை அவனால் இப்போது அதுமானம் செய்ய முடிந்தது உடனே இதைப்பற்றிக் கலைச்செழியனுக்கும் மாயாவுக்கும் ஃபோன் செய்தான் பிரகாசம். மாலையில் அவன் கமலக்கண்ணனைக் காணப்போகு முன் கலைச்செழியனைச் சந்தித்தாக வேண்டிய முக்கியமான காரியம் இருந்தது அவனுக்கு.

16

மாலையில் பயமுறுத்தக்கூடிய வேறொரு செய்தியும் கமலக்கண்ணனுக்கு நம்பிக்கைக்குரிய வட்டாரத்திலிருந்து தெரிவிக்கப்பட்டது. அடுத்த அசெம்பிளிக் கூட்டத்தின் போது அவர் மேல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரலாம் என்று தெரிந்தபோது நிலைமை இன்னும் தீவிரமாகியது. இராஜிநாமா செய்து வெளியேறிவிட வேண்டுமென்ற பதற்றமும், பரபரப்பும், அவர் மனத்தில் அதிகமாயின. அவமானப்பட்டு, மரியாதைக் குறைவாகிப் பத்திரிகைகளில் சந்திசிரிக்கு முன் தப்பி விடவே விரும்பினார். அவர் தன்மேல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்து நிறைவேறுவதற்கு முன் தானே பதவியிலிருந்து விலகிடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் கமலக்கண்ணன்.

அவர் இப்படி மனங்குழம்பிப் பரிதவித்துக் கொண்டிருந்த வேளையில் பிரகாசம் அவரைத் தேடி வந்தான். அவர் அவனிடம் அதிகம் பேசவில்லை. ‘தினக்குரல்’–கணக்கு வழக்குகளைத் தீர்த்து ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கான விவரங்களைத் தெரிவித்துச் சுருக்கமாகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/185&oldid=1049508" இலிருந்து மீள்விக்கப்பட்டது