பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20
நெஞ்சக்கனல்
 

அது ஏதாவதொன்றிற்காக ஏழைமைப்பட்டு ஏங்கி நிற்கத்தான் செய்யும். இலட்சாதிபதி கமலக்கண்ணன் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? பொதுவாழ்வின் முதல்படி யாகியமேடையில்தைரியமாக ஏறுவதென்றுமுடிவு செய்து விட்டார் அவர். மேடையில் ஏறும் ஆசை வந்துவிட்ட தென்பதற்காக மேடையைப் பற்றிய பயமும் தயக்கமும் போய்விட்டதென்று கொள்வதற்கில்லை. மேடை, சொற்பொழிவு, கைதட்டல், முகஸ்துதி. இவைகளுக்கு எல்லாமே முற்றிலும் புதியவனான ஒரு பாமரனுக்கு–ஒரு நல்லவனுக்கு முதலில் இவை எல்லாமே அசட்டுத்தனமாகவும் விளையாட்டுத்தனமாகவும் தோன்றும். நாள் ஆகஆக இதே அசட்டுத்தனங்களையே பலர் மெச்சும்படி செய்து விடுகிற சாதுரியம் வந்துவிடும். ‘தான் மட்டும் அசடனாக இருக்கிறோமோ?’ என்று பயந்து தயங்குவது போய்த் தன்னால் எதிரே இருக்கிற அத்தனை பேரையும் அசடர்களாக்க முடியும் என்ற துணிவும் நம்பிக்கையும் வந்து விட்ட பிறகு, முதலில் அசட்டுத்தனங்களாகவும், விளையாட்டுத்தனங்களாகவும் தோன்றிய அதே காரியங்கள் வாழ்க்கை நோக்கங்களாகவும், நாளடைவில் இலட்சியுங்களாகவும் மாறிவிடும்.

கடிதங்களில் எல்லாமே கையெழுத்துப் போட்டு முடித்துவிட்டுப் பிரசங்கத்தைத் தயாரித்துக் கொடுப்பதற்காக வரவிருக்கும் தமிழ்ப்பண்டிதர் வெண்ணெய்க் கண்ணனாரை எதிர்பார்த்துக் காத்திருந்தார் கமலக் கண்ணன். வெண்ணெய்க் கண்ணனார் என்ற பெயரைப் பார்த்தவுடன் ஏதோ பொன்விழாக் கொண்டாடும் வயதுக்குத் தலைநரைத்த கிழவரென்று நினைத்துவிடக் கூடாது. வயது என்னவோ முப்பது முப்பத்திரண்டு – தான் இருக்கும். பெற்றோர்கள் அவருக்குச் சூட்டிய நவநீதகிருஷ்ணன் என்ற பெயரை அளவற்ற தமிழ்ப் பற்றுக் காரணமாக இப்படித் தமிழாக்கிக் கொண்டு விட்டார். நவநீதம் என்றால் வெண்ணெய், கிருட்டிணன் என்றால் கண்ணன் முதலில் ‘நவநீத கிருட்டிணன்’ என்று-