பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

நெஞ்சக்கனல்

சுட்டிக்காட்டிய நாற்காலியில் அமர்ந்ததும் இருந்தாற் போலிருந்து, ‘ஏர்க்கண்டிஷன்’ என்பதை எப்படித் தனித்தமிழில் சொல்லுவதென்று ஒரு சந்தேகம் வந்தது. பண்டிதருக்கு. இப்போதெல்லாம் இப்படிச் சந்தேகங்கள் வருவது அவரைப் பொறுத்தவரை வழக்கமாகிவிட்டது. எதைப் பார்த்தாலும் அதற்குத் தனித்தமிழ் என்ன என்று சிந்திப்பதிலேயே அவருடைய பெரும்பாலான நேரம் கழிந்து போய்க்கொண்டிருந்தது. தெருவிலே, ஒட்டவிலே, பொது இடங்களிலே பார்க்கிற விளம்பரப் பலகைகளில் உள்ள பெயர்களை எல்லாம் தமிழாக்கிப் பார்த்து உள்ளூர மகிழ்கிற சுபாவம் அவருக்கு. ‘ஏர்க்கண்டிஷன் ரூம்’ என்பதைக் குளிர் அறை என்று கூறலாமா, ‘தண்ணறை’ என்று கூறலாமா? என்றெல்லாம் சிந்தித்து இரண்டிலும் கடுமையானது ‘தண்ணறை’ என்பதே ஆகையால் அப்படியே கூறவேண்டும் என மனதுக்குள்ளே ஒரு முடிவுக்கு வந்தார் அவர். அந்த நேரம் பார்த்துக் கமலக் கண்ணன் குறுக்கிட்டு வினவினார்.

“என்ன ஐயா புலவரே! என்ன யோசிக்கிறீர்? காபி டீ ஏதாவது குடிக்கிறீரா?”

“நான் காபி, டீ எதுவும் அருந்துவதில்லை. பால் இருந்தால் பருகலாம்...” என்று கூறியவாறே ஒரே சமயத்தில் கமலக்கண்ணனுடைய வாக்கியங்களில் இரண்டு மூன்று வேற்றுமொழிச் சொற்கள் வந்துவிட்டதாக உள்ளூர் வருந்தி இருந்தார் வெ. கண்ணனார்.–

“காண்டினிலிருந்து ஒரு கப் பால் கொண்டுவரச் சொல்” என்று டெலிபோனை எடுத்து உத்தரவு பிறப்பித்தார் கமலக்கண்ணன். பால் வந்தது. புலவர் பாலை எடுத்துப் பருகியபின் கமலக்கண்ணன் அவரிடம் தமக்காக அவர் சொல்லித் தரவேண்டிய பிரசங்கம் எப்படி அமைய வேண்டும் என்பதை விவரிக்கத் தொடங்கினார்.

“இங்கேயிருந்து எழுபது எண்பது மைலுக்கப்பாலே ஒரு சின்னக் கிராமத்திலே ‘காந்திய சமதர்ம சேவா சங்கம்’னு ஒரு சங்கம் இருக்குது. அதுனோட அனிவர்ஸரிலே பேசணும். இனிமே இதுமாதிரி நம்மைப் பேசக் கூப்-