பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

23

பிடற இடங்களுக்கெல்லாம் நானும் பேசப் போகலாம்னு நினைக்கிறேன்... அதுக்கெல்லாம் உங்க உதவி ரொம்பத் தேவைப்படும்...நான் செய்யவேண்டிய பிரசங்கத்தை நீங்க டிக்டேட் செய்தீங்கன்னா, அப்படியே எழுதிக்குவேன். ஒரு தரம் எழுதிக்கிட்டா எழுதறப்பவே எனக்குப் பாதி மனப்பாடம் ஆயிடும்...”

“அதெற்கென்ன? தங்கள் சொற்பொழிவை உருவாக்கிக் கொடுப்பதில் எனக்குப் பெருமகிழ்ச்சியே.”

“அது சரி! உங்களைப் போலத் தமிழ் வாத்திகள்ளாம் மேடை மேலே மூச்சுவிடக்கூட இடைவெளி இல்லாமச் சரமாரியாப் பொழியுதாங்களே? அது எப்படி முடியுது? எங்களுக்கெல்லாம் ரெண்டு வார்த்தை சேர்த்துப் பேசறதுக்குள்ள கை பதறுது, கால் நடுங்குது, நாக்கு வறளுது... என்னென்னமோ செய்யுதே...”

“பயிற்சியும், பயிற்சியின்மையுமே காரணம்...”

“பயிற்சியின்னா... எக்ஸ்பீரியன்ஸ்– அதைத்தானே சொல்றீங்க நீங்க...”

“ஆம்! அதனையே குறிப்பிட்டேன். பயிற்சியால் ஆகாததொன்றில்லை. சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்.”

“பிரசங்கத்தைச்சொல்லுறீங்களா? எழுதிக்கிறேன்...”

“தொடங்கலாமா?...”

“சும்மாச் சொல்லுங்க...நேரமாகுது...”

“முதற்கண்...”

“அதென்ன முதல்கண்ணு ரெண்டாங்கண்ணுன்னு?”

“அல்ல! அல்ல! ‘முதற்கண்’ என்றால் முதலில் என்று தான் பொருள்..:எழுதுங்கள்...”

“ஒய் பண்டிதரே! இதோ பாரும்...! முதல்லே ஒரு சங்கதியைத் தெளிவா நீரு தெரிஞ்சுக்கணும். நீர் எனக்குத் தயாரிச்சுக் கொடுக்கிற பிரசங்கம் நான் பேசினா எப்படி இருக்குமோ அப்படியிருக்கனுமே ஒழிய நீர் பேசினா எப்படியிருக்குமோ அப்படியிருக்கப்படாது. நீருபாட்டுக்கு ‘முதற்கண்’ அது இதுன்னு கடுந்தமிழா அடுக்கிட்டிருன்னா கேக்கறவனுக்குஉம்மைப்போல ஒரு புலவர்தான்பிரசங்கத்-