பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
24
நெஞ்சக்கனல்
 


தைத்தயாரிச்சுக்கொடுத்திருக்கணும்னு புரிஞ்சு போயிடும். இதெல்லாம் ரொம்ப நாகுக்காகச் செய்து கொடுக்கனும் நீர்! நான் சொல்லுறது மனசிலே ஆகுதா? இல்லையா?”

புலவர் பயந்தபடியே தலையை அசைத்தார்.

“முதல்லே உங்களுக்கெல்லாம் என் வணக்கம்னு போட்டுக்கறேன்...”

“சரி...”

“அப்புறம் என்ன பேசலாம்னு சொல்லும்...”

“இச்சிற்றுாரில் கடந்த சில ஆண்டுகளாக இக்கழகம் சீரிய பணிகள் பல ஆற்றி வருகிறதென்று நான் பலர் வாயிலாகக் கேள்விப்பட்டுள்ளேன்...”

“அதுசரி; நான் அப்படியெல்லாம் ஒண்னும் கேள்விப் படவியே ஐயா?”

“படவில்லையெனினும் இங்ஙனம் சொல்லித் தொடங்குதல் ஒரு மரபு...”

“மரபுன்னா என்னாய்யா?”

“தொன்று தொட்டு வரும் முறைமை–”

“இப்ப நீர் சொல்ற இந்த அர்த்தம் மரபுங்கிறதை விட இன்னுமில்ல கடுமையாயிருக்கு–?”

“எதற்கும் தாங்கள் தமிழ்க் கையகராதி ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளுதல் நல்லது. இதுபோன்ற நேரங்களில் பெரிதும் பயன்படும்...”

இப்பவே வாங்கியாரச் சொல்றேன்! அது எங்கே கிடைக்கும்னு மட்டும் சொல்லுங்க–என்று உற்சாகத்தோடு உடனே கேட்டார் கமலக்கண்ணன். வெண்ணெய்க்கண்ணனார் உடனே அந்த இடத்திலிருந்து மிக அருகிலுள்ள ஒரு புத்தகக் கடையின் பெயரைக் கூறவே கமலக்கண்ணன் டெலிபோனை எடுத்துப் புத்த்கத்தை வாங்கிவர உத்தரவிட்டார். பத்தே நிமிஷங்களில் ஒரு புதிய தமிழகராதி அவருடைய மேஜைக்கு வந்துவிட்டது.

“இதோ இப்ப உம்மமுன்னாடியே நீர் சொன்ன வார்த்தைகளில் எனக்குப் புரியாததுக்கு உடனே இந்த அகராதியிலேஅர்த்தம் பார்க்கிறேன்"–என்று சொல்லிக்கொண்டே