பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

25

வந்த கமலக்கண்ணன் ஒரு நிமிஷம் யோசித்துத் தயங்கிய பின், “என்ன சொன்னீரு? மறந்தில்ல போச்சு? அதை இன்னொரு தரம்சொல்லுமேன்பார்க்கலாம்...”– என்றார்.

“இச்சிற்றுாரில் கடந்த சில ஆண்டுகளாக இக்கழகம்சீரிய பணிகள் பல ஆற்றி வருகிறது என்று நான் பலர்வாயிலாகக் கேள்விப்பட்டுள்ளேன்...”– எனக் கிளிப்பிள்ளை போல் மறுபடியும் அந்த வாக்கியத்தைச் சொன்னார் புலவர். அதை ஒவ்வொரு வார்த்தையாக உற்றுக்கேட்டபின்,

“இதிலே கழகம்கிறவார்த்தைக்கும் ‘சீரிய'ங்கிற வார்த்தைக்கும் எனக்கு அர்த்தம் புரியலே. அதை இதிலே பார்க்கிறேன்”– என்று கூறியபடியே அகராதியின் பக்கங்களைப் புரட்டலானார் கமலக்கண்ணன், வேண்டிய பக்கம் உடனே கிடைக்காததனால் தமிழ் அகராதியின் மேலேயே கோபம் கோபமாக வந்தது அதிகம் பொறுமையில்லாத அந்த வியாபாரிக்கு. கடைசியாகக் ‘கழகம்’ என்ற வார்த்தை இருந்த பக்கத்தைக் கண்டுபிடித்து விட்டார் அவர் அர்த்தத்தையும் பார்த்துக்கொண்டார். ஆனாலும் தாம் பார்த்த அர்த்தத்தை உடனே வாய்விட்டுப் படித்து விடாமல்“ ‘கழகம்’ என்றால் என்ன ஐயா அர்த்தம்? நீரேதான் சொல்லுமே; பார்க்கலாம்?” – என்று வெண்ணெய்க் கண்ணனாருக்கே ஒரு ப்ரீட்சை வைப்பது போல் அவரைக்கேட்டார் கமலக்கண்ணன்.

“கழகம் என்றால் சங்கம், மன்றம் என்றுபொருள் படும். காந்திய சமதர்ம சேவா சங்கத்தில் வருகிற சங்கம் என்ற பதத்தையே தனித்தமிழில் அவ்வாறு ‘கழகம்’ என்று குறித்தேன்...”

“தப்பு ஐயா! இதிலே பாரும்...கழகம் என்பதற்கு நேரே ‘சூதாடுமிடம்’ என்று அர்த்தம் போட்டு சாட்சிக்குத் ‘திருக்குறள் 935ஐப் பார்க்க'ன்னு வேறே போட்டிருக்கான். என்னய்யா தமிழ் பெரிய வம்பா இருக்குதே? நான் அந்தச் சங்கத்தைக் ‘கழகம்’னு சொல்லி அவனும் அதை இந்த அகராதியிலே போட்டிருக்கிறமாதிரி அர்த்தத்திலே புரிஞ்சுக் கிட்டான்னா என்ன ஆகும்? எவ்வளவு அனர்த்-