பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

27

குளுமையாக ஒளி பொழியும் டியூப் விளக்குகள் எல்லாம் எரிந்துகொண்டிருந்தன. ஓடாமல் தெரிந்த மின் விசிறிகள் அவ்வளவும் தனிமைக்குச் சுருதி கூட்டுவதுபோல் அவ்வளவு பெரிய ஹாலில் கோரமாகக் காட்சியளித்தன.

தமிழ்ப்புலவர் வெண்ணெய்க்கண்ணனார் ஒரு கனைப் புக்கனைத்துக்கொண்டு எழுந்துநின்றார். ‘புறப்படத்தயாராகி விட்டேன்’– என்பது அந்தக் கனைப்பின் பொருள், கமலக்கண்ணனும் இருக்கையிலிருந்து எழுந்து அவரை வழியனுப்ப உடன் வருகிறவர்போல் அறையிலிருந்துவெளியே வந்தார். வெளியே வந்ததும் அங்கே தயாராக நின்றுகொண்டிருந்த தம்முடைய காரியதரிசிக்குக் கமலக்கண்ணன் ஏதோ ஜாடை காட்டினார். உடனே காரியதரிசி ஒரு கவரை எடுத்துக்கொண்டு வந்து கமலக்கண்ணனிடம் கொடுத்தார். அதைக் கையில் வாங்கிக் கொண்ட கமலக்கண்ணன் புலவருக்குவிடை கொடுக்கிற தோரணையில் முகம் மலர்ந்தார். ஒருவரை வரவேற்கும் போது இப்படி முகம் மலர வேண்டும். விடை கொடுக்கும் போது இப்படி முகம் மலர வேண்டும். வியாபாரியாயிருந்தால் இப்படி, உறவினராயிருந்தால் இப்படி, விரோதியாயிருந்தால் இப்படி, என்றெல்லாம் பழக்கத்தில் கச்சிதமாகதேர்ந்திருந்தார் அவர்.

கையில் இருந்த உறையைப் புலவரிடம் கொடுக்கப் போனவர், ஒரு விநாடி தயங்கிவிட்டு “புலவரே! ஒரு நிமிஷம் இப்படி உள்ளே வாரும் தனியாக உம்மிடம் ஒரு விஷயம் சொல்லணும்” என்று அவரை மீண்டும் அறைக்குள் அழைத்துக்கொண்டு போனார் கமலக்கண்ணன்.

“எனக்குப் பிரசங்கம் எழுதிக் கொடுத்தேனின்னோ சொல்லிக் கொடுத்தேனின்னோ, வெளியிலே யாரிடமும் சொல்லப்படாது. பெரிய இடத்திலே பழகறப்போ நடந்துக்க வேண்டிய இங்கிதம்லாம் உமக்கே தெரியும்னு நினைக்கிறேன். நான் இதெல்லாம் சொல்லாமலே உமக்குத் தெரியனும். எதுக்கும் இப்ப உமக்கு ஞாபகப்படுத்தி வைக்கி றேன். இந்தாரும்! இதை வச்சுக்கோரும். அப்பப்போ என்னால இப்படி முடிஞ்சதைச் செய்யறேன்” என்று சொல்-