பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

நெஞ்சக்கனல்

லிக்கொண்டே மறுபடியும் அதே ரெடிமேட் புன்முறுவ லோடு உறையைப்புலவரிடம் நீட்டினார் கமலக்கண்ணன்.

இதைக் கேட்டுப் புலவர் நாணிக் கோணியபடியே உறையை வாங்கிக்கொள்ளத் தயங்கியவர்போல் நடித்துக் கொண்டே.

“இதெல்லாம் எதற்கு? உங்களுக்கு நான் எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறேன்” என்று குழைந்தார். ஆனால் கைகள் என்னவோ பழக்கத்தால் தாமாகவே முன் நீண்டு உறையை வாங்கிக்கொண்டன.

“இந்தாப்பா இவரைச் சின்ன வண்டிலே கொண்டு போய் ‘டிராப்’ பண்ணிடச் சொல்லு” என்று காரியதரிசிக்கு அடுத்த உத்தரவைப் போட்டார் கமலக்கண்ணன்.

புலவர் முகமெல்லாம் பல்லாகச் சிரித்துக்கொண்டே கமலக்கண்ணனை நோக்கிக் கைகூப்பினார்.

“சரி அப்புறம் பார்க்கலாம். நான்சொன்னதுமட்டும் ஞாபகமிருக்கட்டும்” என்று மறுபடியும் எச்சரிப்பதுபோல் கூறினார் கமலக்கண்ணன். புலவர் புறப்பட்டார் கம்பெனி கார் டிரைவர் வந்து அவரை வண்டி நின்று கொண்டிருந்த இடத்துக்கு அழைத்துக் கொண்டுபோய்க் கதவைத்திறந்து விட்டு மரியாதையாக உள்ளே ஏற்றிக்கொண்டு புறப்பட்டான். கார் புறப்பட்டதும் காருக்குள் இருந்தபடியே அவசர அவசரமாக தனது ஜிப்பாபையிலிருந்து உறைஎடுத்துப் பிரித்துப்பார்த்தார் புலவர். புதிதாகப்பத்து ஐந்து ரூபாய் நோட்டுக்கள் உறைக்குள் புத்தம் புதிதாக வெளுத்து வைத்ததுபோல் மின்னின. ‘ஐம்பது வெண் பொற்காசுகள்!’ என்று தனக்குத்தானே அந்த வெகுமதியைத் தனித்தமிழில் சொல்லிப்பார்த்துப் பெருமைப்பட்டுக்கொண்டார் புலவர் வெண்ணெய்க்கண்ணனார். இடையிடையேடிராபிக்ஸிக்னலுக்காகக் கார் நின்ற இடங்களில் அவருக்குத்தெரிந்தவர்கள். நடந்துபோய்க்கொண்டிருந்தார்கள். அவர்களைப்பெயர் சொல்லி உரத்த குரலில் கூப்பிட்டுத் தாம் அமர்ந்திருந்த காரின் அருகே வரவழைத்து வணக்கம் தெரிவித்தார்.புலவர் வெண்ணெய்க்கண்ணனார் அவர்களுக்கு வணக்கம் தெரிவிக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/30&oldid=1016366" இலிருந்து மீள்விக்கப்பட்டது