பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

நெஞ்சக்கனல்



புலவரோ தம் வீட்டிலுள்ளார் அனைவரும் காண அண்டை அயல் வீட்டிலுள்ளார் அனைவரும் காண, அண்டைஅயல் வீட்டிலுள்ளார் யாவரும் வியக்க, தம் வீட்டின் வாயிற்படிக்கு ஒரு அங்குலம் கூட அந்தப் பக்கம் இந்தப் பக்கம் விலகிவிடாமல் நூலிழை பிடித்தாற்போல் போய்க் கார் நிற்க வேண்டுமென்று அந்தரங்கமாக ஆசைப்படுவது தெரிந்தது.

“நோ எண்ட்ரி போட்டிருக்கானே? இங்கேயேவிட்டிடறேன். தயவுசெஞ்சு சிரமத்தைப் பார்க்காமே நடந்து போயிடறீங்களா ஐயா?” என்று விநயமாகச் சொல்லிப் பார்த்தான் டிரைவர். அதையும் புலவர் செவியுற்றுக் கேட்டதாகத் தெரியவில்லை.

“சந்துமுனை ஒரே சேரும் சகதியுமாக இருக்கும். நான் வழக்கமாகவே இப்பகுதியில் நடந்தே செல்வதில்லை. ரிக்ஷாவில்தான் செல்லுவேன்” என்று நிர்த்தாட்சண்யமாகப் புலவரிடமிருந்து பதில் வந்தது.

“சரிதான் இறங்கி நடய்யா” என்று ஆத்திரம்தீரக்கத்திவிடலாம் போல எரிச்சலாயிருந்தது அவனுக்கு திரும்பிப்போனால் ஐயா கோபித்துக்கொள்வாரோ என்றும் பயமாயிருந்தது. அக்கம்பக்கத்தில் ஒருமுறை பார்த்து விட்டு ‘நோ எண்ட்ரி’யாக இருந்தாலும் பாதகமில்லை என்று வண்டியைத் திருப்பி ‘ரிவர்ஸில்’ உள்ளே விட்டுப் புலவர் வீட்டுவாயிலில் அவரை இறங்கச்சொல்லித் துரிதப்படுத்தினான் டிரைவர். புலவருக்கே ஒரே வருத்தம். காரைத் தமது ‘தொல்காப்பியர் இல்லம்’ வரை விடுத்த டிரைவன் (டிரைவருக்கு அவர் கண்டுபிடித்த ஒருமை) முன் முகமாக விடுக்காமல் பின் முகமாக விடுத்ததும் அண்டை அயலார் தான் அத்தகு காரொன்றிலிருந்து இறங்கும் சீர்மையைக் காண முடியாது விரைந்து இறங்கச் சொல்லித் துரிதப்படுத்துகிறானே என்பதும் அவரை அதிருப்திக்குள்ளாக்கிவிட்டன. அதிருப்தியுடன்தான் அவர் உள்ளே இறங்கிச் சென்றார். ‘விட்டது சனி’ என்பதுபோல் சொல்லிக்கொள்ளாமல் கூடக் காரை விட்டுக்கொண்டு ஓட்ட