பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

33

நீயும் வந்து கூட்டங்களில் கலந்துகொண்டு பரிசு வழங்கணும்"—என்றார்.

அவர் இப்படிக் கூறியவுடன் மறுபடியும் பெர்ரிமேஸன் முகத்திலிருந்து விலகியது. அந்த அம்மாள் ஒரு விநாடி தலைநிமிர்ந்து, “அத்தைக்கு மீசை முளைத்தால் தானே சித்தப்பா! மீசை முளைக்கட்டும் அப்புறம் பார்க்கலாம்”—என்று சிரித்துக்கொண்டே கூறியது அவருடைய இந்தப் புதிய நைப்பாசையைக் கொஞ்சம் கேலி செய்வது போல் கூட இருந்தது.

அந்தக் கேலியைக் காதில் வாங்கிக் கொள்ளாதவர் போல் மெளனமாக இருந்துவிட்டார் அவர். கூட்டம், பிரசங்கம் என்றாலே காதவழி பயந்து ஓடும் தன் கணவனுக்கு இப்போது அவற்றில் எல்லாம் ஆசையும், பற்றுதலும் வந்திருப்பதை அந்த அம்மாளால் உடனே அங்கீகரித்துவிட முடியவில்லை. அவள் அங்கீகரிக்காமல் கேலி செய்ததை அவரும் அப்போது பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. ஆனாலும் அவள் தன்னோடு காந்திய சமதர்ம சேவா சங்கத்துக்கு வரமாட்டேனென்றது மட்டும் அவருக்குப் பிடிக்கவில்லை. அவள் வர இனங்குவாள் என்றே எதிர்பார்த்தார்—அவர். அவள் வரமாட்டேனென்றதை மட்டும் அவரால் இரசிக்க முடியவில்லை.


3

ஏழையின் திறமைகள் வியக்கப்படாத உலகம் இது. திறமைகளை உடையவன் செல்வாக்கு என்ற வெளிச்சத்தைப் போட்டு அதை மற்றவர்களுக்கும் காட்டிப் ‘பார் பார்’—என்று தாண்டிவிட்டு வியக்கச் செய்யவேண்டும். எத்தனையோ சாதாரணப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் கூட மிகவும் திறமையாக மேடையில் பேசுகிற காலம் இது. எத்தனையோ சாதாரண அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் கூடப் பிறர்வியக்க மேடையில் முழங்குகிற இந்த நூற்றாண்டில் மனிதனின் வெற்றி தோல்விகளே மேடை மீது தான் நிர்ணயிக்கப்படுகின்றன. சாரசரி மனிதனின் வெற்றி