பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

நெஞ்சக்கனல்


‘இதென்ன கோலம்: புதுசாயிருக்கே?” – என்று மிஸஸ் கமலக்கண்ணன் வியந்தாள்.

“நீயும் வரியா?”–-என்ற கமலக்கண்ணனின் கேள்விக்குப் பதில் கூறாமல் உதட்டைப் பிதுக்கினாள் அவள். பத்து நிமிஷம் கழித்து பீட்டில்ஸிலிருந்து பிரிந்து வந்த ஆள்போல் முன் நெற்றியில் சுருண்டு விழும் கிராப்பும் அரும்பு மீசையுமாக ஒரு ஸ்லாக்–பாண்ட்–ஆள் போர்டிகோவில் வந்து நின்றான். அவனுடைய தோளில் காமிரா ஒன்றும் தொங்கியது. கையில் அவனைவிடச் சற்று பருமனான ஒரு ‘லெதர் பாக்’ காட்சியளித்தது.

“சார் நீங்கதானே...?” என்று இழுத்தான் அவன்.

“ஆமாம்!...நான்தான்.பூமி நாயகம் அனுப்பிச்சாரா? நீங்கதானே நியூஸ் ரிப்போர்ட்டர்...”

“ஆமாங்க...! கலைச்செழியன்...சீஃப் ரிப்போர்ட்டர் ஆப் டெய்லி டெலிகிராம்.”

“அது சரி! உங்க சொந்தப் பேரு”.

“சொந்தப் பேரே கலைச்செழியன் தானுங்க...”

“சரி? புறப்படலாமா?”

“ராத்திரி ஒன்பது மணிக்குள்ள திரும்பிடலாமில்லிங்களா? ஏன்னா எங்க பேப்பர் ஸிட்டி எடிஷனுக்குள்ள வந்திட்டா உங்க பேச்சும் போட்டோவும் காலைப்பேப்பர்லே வரும்படியாய்ப் பண்ணிடலாம்...” என்றுகூறியஅந்தஆள் “வரும்படியாய்” என்பதை மட்டும் கொஞ்சம் அழுத்தினாற் போலிருந்தது. அந்த ஒரு வார்த்தைக்கு மட்டும் ரெண்டு அர்த்தம் இருப்பதுபோல் தோன்றியது கமலக்கண்ணனுக்கு உள்ளுற நகைத்துக் கொண்டார் அந்தப் பிறவி வியாபாரி.

நிருபர் முன் ஸுட்டில் ஏறிக்கொண்டார். கமலக்கண்னன் பின்னால் ஏறிக்கொண்டதும், டிரைவர் ஸ்டார்ட் செய்தான்.போர்டிகோவில் நின்று மிஸஸ் கமலக்கண்ணன் கையை ஆட்டிவிடைகொடுத்தாள். கார் கேட்டைக் கடந்து ரோடில் இறங்கி விரைந்தது.பிரயாணம் உற்சாகமாக இருப்பதை உணர்ந்தார் கமலக்கண்ணன். கிண்டியைக் கடந்து கார் விரைந்த போது குதிரைப் பந்தய மைதானத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/38&oldid=1047098" இலிருந்து மீள்விக்கப்பட்டது