பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
38
நெஞ்சக்கனல்
 


“உங்களைப் போன்றவர்கள் பெரிய மனசு பண்ணினால் இந்த ஆசிரமம் எவ்வளவோ வளரமுடியும்”– என்று பேச்சோடு பேச்சாக எதையோ நினைவூட்டி வைத்தாள் பிரின்ஸிபால் அம்மாள். தலைமை வகித்து விழாவைத் தொடங்கி வைப்பதற்குமுன் எதிர்பாராதவிதமாக இன்னொரு காரியத்தையும் அவர் செய்யவேண்டியிருந்தது. காந்திய சமதர்ம சேவா சங்கத்து ஆசிரமத்தின் புதிய ‘பிளாக்’ ஒன்றைக்கட்டுவதற்கான அஸ்திவாரக்கல்லையும் அவரை நடும்படி வேண்டிக்கொண்டாள் பிரின்ஸிபால் அம்மாள். அழகிய சிறிய வெள்ளிக்கரண்டி அவரிடம் அளிக்கப்பட்டது. அஸ்திவாரக்கல்லின் ஒர் ஒரத்தில் சம்பிரதாய மாக இரண்டு கரண்டி சிமென்ட்டை அள்ளிவைத்தார் கமலக்கண்ணன். மீதிக் காரியங்களை அருகிலிருந்த கொத்தனார் செய்துமுடித்தார். கூட்டம் தொடங்கியது.பிரின்ஸி பால் அம்மாள் கமலக்கண்ணனை வானளாவப் புகழ்ந்து வரவேற்பு மடல் ஒன்றை வாசித்துக் கொடுத்தாள்.

அந்த வரவேற்பில் ஆசிரமக் கட்டிட நிதிக்குக் கமலக் கண்ணன் நிதியுதவி செய்யவேண்டுமென்ற வேண்டுதலும் இருந்தது. கலைச்செழியன் ‘பளிச்’ சென்று ‘பிளாஷ்’ பல்புகள் எரியப் புகைப்படங்களைப் பிடித்துத் தள்ளினான். கிராமத்து மக்களுக்குக் கலைச்செழியன் அங்கும் இங்கும் தாவித்திரிந்துபோட்டோ பிடிப்பது மிகவும் வேடிக்கையாக இருந்தது. பலர் படங்களில் விழவேண்டுமென்றே தலையைக் கொக்குப்போல் உயர்த்தினார்கள். சிலர் படங்களில் விழ முயன்று கீழே விழுந்தார்கள். கமலக்கண்ணன் பேச எழுந்து– ஒரு பற்றுக்கோடும் இன்றி நிராதரவாக விடப்பட்டது போன்ற சபை அச்சத்துடன் எதிரே இருந்த ஒரே பற்றுக்கோடாகிய ‘மைக்’ கைப்பற்றினார்... அந்தநாட்டுப் புறத்து மைக் ‘டபக்’ கென்று கீழே சரிந்துவிட்டது. ‘மைக்’ காரன் ஓடிவந்து சரிசெய்து பார்த்தும் அதுகமலக்கண்ணனுடைய வாய்க்குச்சரியான உயரத்தில் நிற்க மறுத்துவிட்டதனால் அவனே அதைப்பேச்சு முடிகிறவரைகையினால் தாங்கிப்பிடித்துக் கொண்டு நிற்க வேண்டியதாயிற்று. இந்தமுதல்