பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
50
நெஞ்சக்கனல்
 


“நீங்க இத்தனைபேர் வந்து சொல்றப்ப எப்படி மறுக்கிறது..?மினிஸ்டர்வேறே அபிப்ராயப்படறார்ங்ரீங்க...”

கமலக்கண்ணன் அந்தக் கோயில் புனருத்தாரண நிதிக் கமிட்டிக்கு வைஸ் பிரஸிடெண்டாக இருக்க இண்ங்கினார். பின்பு மெல்ல, “கமிட்டியிலே வேறே யார் யார் லாம் இருக்கா...?” என்று கேட்டார்.

“குமரகிரி டெக்ஸ்டைல்ஸ் குப்புசாமி நாயுடு, அம்பாள் ஆட்டோ மொபைல்ஸ் கன்னையாசெட்டியார், கொச்சின்சா மில்ஸ் குமாரசாமி ஐயர், குபேரா பேங்சேர்மன் கோபால் செட்டியார் எல்லாரும் கமிட்டிலே இருக்கா...இனிமே ‘வைஸ் பிரஸிடெண்ட்’தான் கமிட்டியையே கூட்டணும். ‘செக்ரட்ரி’ ஒருத்தர் ‘எலெக்ட்’ பண்ணனும். வைஸ் பிரஸிடெண்டாகிய தனக்குக் கீழே இத்தனை லட்சாதிபதிகளும், தொழிலதிபர்களும், கமிட்டியில் இருப்பதாகக் கேட்டபோது அந்தப் பெருமையை வெளியே காண்பித்துக் கொள்ளாமல்,

“ஆமாம்! குப்புசாமிநாயுடு அமெரிக்கா போயிருக்கறதாக யாரோ சொன்னாங்களே? வந்துட்டாரா?” என்று விசாரித்தார்.

“வந்து விடுவார். இந்த வாரம் திரும்பி வரணும்” என்று வந்திருந்தவர்களில் ஒருவர் பதில்கூறினார். உடனே உட்புறம் திரும்பி எல்லாருக்கும் ‘காபி’ கொண்டுவரச் சொல்லிக் குரல் கொடுத்தார்.

“எதுக்குங்க;இப்பதான் காபி குடிச்சிட்டு வரோம்...” என்று வந்திருந்தவர்களும் உபசாரத்துக்காக மறுத்தார்கள். “அப்படிச் சொல்லப்படாது” என்று கமலக்கண்ணனும் உபசாரத்துக்காக வற்புறுத்தினார். கடைசியில் எல்லாரும் காபி குடித்துவிட்டே புறப்பட்டார்கள். போர்டிகோவரை சென்று வழியனுப்பிவிட்டு உள்ளே திரும்பிய பின்பே, ‘மினிஸ்டர் விருத்தகிரீஸ்வரனிடமிருந்து டெலிபோன் வந்தாலும் வரும்’ என்பதாக அவர்கள் கூறிச் சென்றது நினைவு வந்தது அவருக்கு. அவர் தனக்குப் ஃபோன் பண்ணுகிற வரை காத்திருக்கப் பொறுமை இன்றித் தானே அவருக்கு