பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
52
நெஞ்சக்கனல்
 


மில்லே! கடம்பவனேசுவரர் கோவில் புனருத்தாரணக் கமிட்டிக்கு நான்தான் ‘வைஸ் பிரசிடெண்டா’ இருக்கனும்னு மினிஸ்டரே வற்புறுத்தினார்” என்றுதான் பதில் வந்தது அவரிடமிருந்து. லெளகீகத்தை அதில் தேர்ந்த மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு அவர் எப்போதுமே தயங்கியதில்லை. இப்போதும் அப்படி ஓர் லெளகீகத்தை அவர்கள் இன்று தனக்குக் கற்றுக் கொடுத்து விட்டுப் போனதாக நினைத்துப் பெருமைப்பட்டாரே ஒழிய அவர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாக அவர் நினைக்கவே இல்லை. ‘நல்ல வியாபாரி ஒரு தடவை தான் ஏமாறும்போது அதிலிருந்து பலரை ஏமாற்றுவதற்கான பலத்தைப்பெறுகிறான்’ என்பது கமலக்கண்ணனின் சித்தாந்தம். இந்தச்சித்தாந்தத்தில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை வந்திருந்தது. இந்த விஷயத்தை வேறுபல நண்பர்களிடம் கூற நேர்ந்தால், கூட இன்மேல், ‘மினிஸ்டரே நான்தான் உபதலைவரா இருக்கணும்னு ரொம்ப வற்புறுத்தினார்’ என்பதாகச் சொல்வதைத் தவிர வேறுவிதமாகச் சொல்ல அவரால் முடியாது. அந்த அளவு பிறர் சாமர்த்தியத்தால் நிரூபணமாகும் உபாயங்களைக்கூடத் தன் சாமர்த்தியத்தால் இடம் விட்டு ஏற்றுக் கொள்ளும் உலகியல் ஞானத்தை அவர் பெரிதும் போற்றி வந்தார். வியாபாரி ஒருவன் சுலபமாக அரசியல் பிரமுகனாக முடிவதற்கும் பள்ளிக்கூட ஆசிரியன். ஒருவன் சுலபமாக அரசியல்வாதியாக முடியாததற்கும். இதுதான் காரணமாக இருக்க்வேண்டும் போலிருக்கிறது. நியாயமான திறமை வேறு; திறமையான சாகஸம்வேறு. திறமையான சாகஸம் உள்ளவர்கள் வெற்றிமுனையில் உள்ள காலம் இது. ஆகவே தான் கமலக்கண்ணன்கால தேசவர்த்தமானங்களைப்புரிந்து கொள்ளவும் அதன்படி மாறவும், வளையவும் தெரிந்து கொண்டிருந்தார். பணம் இருந்தாலும் அன்த ஒரு சாக்ஸமாக்கிப் புகழ்பெற வழி தெரிய வேண்டுமே? அது தெரியா விட்டால் என்ன இருந்தும் பயனில்லை. கமலக்கண்ண்னுக்குப் புகழடையும் வழிதுறைகளும் புலப்பட்டது அவருடைய அதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும். ஐம்பது